கேமரன் மலை டிச 5- சுங்கை பாலாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு அலைஒளியின் நேரடி பயணம் பஹாங் மாநிலத்தின் குளிர் மிக்க கேமரன் மலைத் தொடரில், 1949 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை தமிழ்க்கல்வி ஒளியை பரப்பி வரும் ஒரு சிறப்பு கல்வி நிலையம் —தேசிய வகை சுங்கை பாலாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
இவ்வாண்டு பள்ளி 76 ஆண்டு நிறைவை கொண்டாடும் பெருமை பெற்றுள்ளது. கடந்த சகாப்தங்களாக தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் கல்வி ஒளி இந்தச் சிறிய கல்வி இல்லத்திலிருந்தே ஒளிர்கிறது. பள்ளியின் தலைமையாசிரியர் பத்மநாதன் ஐயப்பன் அலைஒளியிடம் பேசியபோது, தற்போது 9 ஆசிரியர்கள் மற்றும் 12 மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வருவதாகவும், பள்ளி பஹாங் மாநில அரசு மற்றும் கல்வி அமைச்சின் நிதி உதவியுடன் இயங்கிவருவதாகவும் தெரிவித்தார்.
அதேசமயம், பொது மக்களின் ஆதரவும், நல்ல உள்ளங்களின் பங்களிப்பும் இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து துணைபுரிகின்றன என்றும் அவர் மனமுவந்து பாராட்டினார்.
குறைந்த மாணவர்கள் – உயர்ந்த சாதனைகள்
குறைந்த மாணவர் எண்ணிக்கையுடைய பள்ளியாக இருந்தாலும், கல்வி அமைச்சின் அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகின்றன. முக்கியமாக, இப்பள்ளியில் படித்த பல முன்னாள் மாணவர்கள் மருத்துவர், காவல் துறை அதிகாரி, ஆசிரியர், தொழில் அதிபர் உள்ளிட்ட உயர்ந்த நிலைகளில் இன்று பதவி வகிக்கின்றனர் என்பதில் தலைமையாசிரியருக்கு பெருமையும், மகிழ்ச்சியும் மிகுதியாககுறைந்த மாணவர் எண்ணிக்கையுடைய பள்ளியாக இருந்தாலும், கல்வி அமைச்சின் அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படுகின்றன. முக்கியமாக, இப்பள்ளியில் படித்த பல முன்னாள் மாணவர்கள் மருத்துவர், காவல் துறை அதிகாரி, ஆசிரியர், தொழில் அதிபர் உள்ளிட்ட உயர்ந்த நிலைகளில் இன்று பதவி வகிக்கின்றனர் என்பதில் தலைமையாசிரியருக்கு பெருமையும், மகிழ்ச்சியும் மிகுதியாக இருந்தது.
தமிழ்ப்பள்ளியில் மலாய் மாணவர்களின் சேர்க்கை – ஒற்றுமையின் அழகான எடுத்துக்காட்டு
இப்பள்ளியில் தற்போது 8 மலாய் இன மாணவர்கள் தமிழ்மொழியை கற்று பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல இன மாணவர்களும் தமிழ்மொழியை நன்கு படித்து, எழுதிக் கற்றுள்ளனர். இது கல்வி மூலம் உருவாகும் உண்மையான இன ஒற்றுமை, மொழிப் பாசம், மற்றும் கலாச்சார இணைவு என்பதற்கான நேரடி சான்றாக திகழ்கிறது.
சமூக நல அமைப்புகளின் ஆதரவு
சமீபத்தில், இத்தமிழ்ப்பள்ளிக்கு சிங்கைத் தொழிலதிபர் டாக்டர் சின்னையா – ஜோபினா தம்பதிகள் வருகை புரிந்தனர். குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவர்கள் முன்வைத்தனர்.
அவர்களுடன் கேமரன் மலை இந்திய சமூக நல பெண்கள் இயக்கத்தின் தலைவர் சுமதி, ஆலோசகர் இராஜன் ஆகியோரும் கலந்து பள்ளிக்கு தங்களின் ஆதரவை வழங்கினர்.
அலைஒளியின் நேரடி வருகை
தமிழ்க்கல்வியை பாதுகாப்பது, வளர்ப்பது என்பது அலை ஒளியின் முக்கிய நோக்கமாகும். அதற்காகவே எங்கள் ஊடக குழு நேரடியாக சுங்கை பாலாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியை சென்றடைந்து, அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் உறுதியான கல்விச் செயற்பாடுகளை பதிவு செய்தது.ளியை சென்றடைந்து, அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் உறுதியான கல்விச் செயற்பாடுகளை பதிவு செய்தது.




