Alaioli
 ஜொகூர் காசிஹ் வீடு தொடக்கவிழா! டத்தோ’ ஹாஜி ஜாப்னி முகமது ஷுக்கோர் தொடக்கி வைத்தார்

கோகி கருணாநிதி

கூலாய்டிச.7 ஜொகூர் மாநிலத்தின் வீட்டுவசதி மாற்றப் பயணத்தில் புதிய மைல்கல்லை உருவாக்கும் விதமாக, IOI மால் கூலாயில் நேற்று நடந்த ஜொகூர் 2026 நிதிநிலை வீட்டுவசதி முன்னெடுப்பு — ஜொகூர் காசிஹ் வீடு தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது. மாநில வீட்டுவசதி மற்றும் உள்ளூராட்சி ஆட்சிக்குழுத் தலைவர் டத்தோ’ ஹாஜி ஜாப்னி முகமது ஷுக்கோர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழா, ஜொகூர் மக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் வசதியான வீடுகளை வழங்கும் மாநிலத்தின் நீடித்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்தியது.



அவர், ஜொகூர் மாநில மந்திரி பெசார் மாண்புமிகு டத்தோ’ ஒன் ஹஃபிஸ் காஸி அவர்களின் தெளிவான அர்ப்பணிப்பையும் முன்னோடியான வழிகாட்டுதலையும் சிறப்பித்தார். வீட்டுவசதி கொள்கைகளை மாற்றும் முயற்சிகளில் அவரது ஆழ்ந்த ஈடுபாடு, இன்றைய ஜொகூர் குடும்பங்கள் எதிர்நோக்கும் தேவைகளைத் தீர்க்கும் பயனுள்ள தீர்வுகளை உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஜொகூர் அரசு, 2030ஆம் ஆண்டிற்குள் 100,000 ஜொகூர் மலிவு விலை வீடுகளை அமைக்கும் உயர்வான இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இது ஒரு எண்ணிக்கை இலக்காக மட்டும் அல்லாது, ஒவ்வொரு ஜொகூர் மகனும் மகளும் மரியாதைமிக்க வாழ்க்கை நடத்த இயன்ற நிலையான இல்ல வசதியைப் பெற வேண்டும் என்ற மாநில அரசின் பொறுப்புணர்வின் பிரதிபலிப்பாகும்.


2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு வரை கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 20,000க்கும் மேற்பட்ட ஜொகூர் மலிவு விலை வீடுகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 10,000 வீடுகள் தற்போது பல்வேறு கட்டுமான நிலைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இது மாநில அரசு வகுத்துள்ள ஒவ்வொரு திட்டமும் செயல்பாட்டில் துல்லியமாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.

2026ஆம் ஆண்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜொகூர் காசிஹ் வீடு திட்டம், முதன்முறையாக வீடு வாங்க விரும்பும் இளம் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வருமானத்திற்குட்பட்ட குழுக்களுக்குச் சிறப்பாக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மக்கள் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், தங்களது சொந்த வீடு பெறும் நம்பிக்கையை உயர்த்தவும் முக்கிய பங்காற்றுகிறது.



வீட்டு வாடகைச் செலவைத் தணிக்க, மாதந்தோறும் ரி.ம200 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் வாடகை உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக வாடகையில் வசிக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இது உடனடி நிதி நிவாரணமாக அமையும்.

முதல் வீடு வாங்குபவர்களுக்கு ரி.ம5,000 நிதி ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. ஜொகூர் மலிவு விலை வீடுகள், பூமி புத்திரா ஒதுக்கீட்டு யூனிட்கள் அல்லது ரி.ம500,000க்கு குறைவான துணை-விற்பனை வீடுகளை வாங்க விரும்புவோருக்கு இது பெரிய ஆதரவாக அமையும்.

முதல் வீடு வாங்குபவர்களுக்கு ரி.ம5,000 நிதி ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. ஜொகூர் மலிவு விலை வீடுகள், பூமி புத்திரா ஒதுக்கீட்டு யூனிட்கள் அல்லது ரி.ம500,000க்கு குறைவான துணை-விற்பனை வீடுகளை வாங்க விரும்புவோருக்கு இது பெரிய ஆதரவாக அமையும்.



வீடு குடியேறும் உதவித் தொகையும் ரி.ம1,000 இதிலிருந்து ரி.ம2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2025–2026 காலகட்டத்தில் புதிய இல்லங்களில் குடியேறும் குடும்பங்களுக்கு இது துவக்கச் செலவுகளை இலகு படுத்தும்.

இன்றைய நிகழ்வில் ஏழு திட்டங்களின் கீழ் மொத்தம் 602 ஜொகூர் மலிவு விலை வீடுகளுக்கான சாவிகள் வழங்கப்பட்டன. கூடுதலாக, ஜொகூர் இளைஞர் இடைக்கால வீட்டுத் திட்டம் உட்பட 467 புதிய யூனிட்கள் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டன. இதனால் மேலும் பல ஜொகூர் குடிமக்களுக்கு தங்களால் ஏற்ற விலையில் வீடு பெறும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.


மேலும், 140 வீடுகளுக்கான குடியேற்று தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நீண்டநாள் கனவு நனவாகிய பல குடும்பங்களுக்கு இது உணர்ச்சி மிகுந்த தருணமாக அமைந்தது. பரிவு வீட்டுத் திட்டத்திற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



வீட்டுவசதி கொள்கை வலுப்படுத்தல், விரிவான இல்ல ஒதுக்கீடுகள், நேரடி நிதி உதவிகள் போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள், ஜொகூர் மாநிலத்தின் வீட்டுவசதி அமைப்பை நவீனமும் நிலையானதுமான மக்கள் மைய நோக்கில் மாற்றுகின்றன. வருங்காலத்தில், ஜொகூர் மாநிலம் மரியாதையும் நம்பகத்தன்மையும் கொண்ட தரமான வீடுகள் வழங்கும் முன்னோடி மாநிலமாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விழாவில் கூலாய் மாவட்ட அதிகாரி பிஸ்‌வான் ரஷிடி டத்தோ’ ஹாஜி முகமட் ரஷிடிஜொகூர் மாநில வீட்டுவசதி முன்னேற்றக் கழக தலைமைச் செயல் அதிகாரி டத்தின் படுகா டாக்டர் சுஹைலிசான் பிந்தி சுலைமான், மாநில மற்றும் பேரூராட்சி துறைகளின் தலைவர்கள், வீட்டு மேம்பாட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News