Alaioli
மலாயாப் பல்கலைக்கழக இந்தியப் பிரிவின் பட்டமளிப்பு பாராட்டு விழாவில் டான்ஶ்ரீ குமரன் பேச்சு

டிகே மூர்த்தி 

கோலாலம்பூர் டிச 07.12.2025 இந்தியப் பட்டதாரி மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே மலாயாப் பல்கலைக்கழகத்தில் 4 அறநிதி அமைப்புகள் காலத்தோடு தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்று மலேசிய சுகாதார முன்னாள் துணையமைச்சர் டான்ஶ்ரீ குமரன் பேசினார். 


கடந்த 03.12.2025 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து பேசும்போது, ஒவ்வொரு ஆண்டும் நான்கு நிகழ்வுகள் முன்னெடுப்பதற்கு மாணவர்கள் நீங்கள் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்


அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த நான்கு நிகழ்வுகள் நீங்கள் திட்டமிட்டு பேராசிரியர்களும் ஒன்றினைந்து ஏற்பாடு செய்தால் அதற்கான செலவுத்தொகை உங்கள் வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது என்றார் பேராக் மாநில ம .இ.காவின் முன்னாள் தலைவர் குமரன் குறிப்பிட்டார்.


ஆகவே, சமுதாயத்தோடு நீங்கள் இணைந்து செயல்படுவதற்கும், கல்விக் கற்பதற்கும், எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வதற்கு நல்லதொரு அடித்தளமாக இந்தப் பல்கலைக்கழகம் நிகழ்வுகளை நடத்தி வருகிறது என்றார் அவர்.


இந்தப் பெருமைக்குரியவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் டேனியல் ஆவார். தொடர்ந்து சமுதாயத்தையொட்டிய இந்திய ஆய்வுத்துறை வளமான எதிர்காலமாக மிளிர வேண்டும் என்று தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் தலைமையாசிருமான குமரன் எடுத்துரைத்தார்.

Leave a Comment
Trending News