Alaioli
அருள்மிகு ஶ்ரீ மகா நாகமுத்து மாரியம்பிகை ஆலயத்திற்கு ரிம 82,640.00 மானியம் வழங்கினார் ஙா கோர் மிங்

டிகே மூர்த்தி 

தெலுக் இந்தான் டிச  07.12.2025 இங்குள்ள ஜாலான் லக்ஸமணாவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மகா நாகமுத்து மாரியம்பிகை ஆலய மேம்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், ஊராட்சி மேம்பாட்டு அமைச்சருமான ஙா கோர் மிங் மொத்தம் 82,640.00 வெள்ளியும், மாநில அரசு சார்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் மொத்தம் 105,000 வழங்கப்பட்டதாகவும் ஆலயத் தலைவர் சுப்பிரமணியம் நன்றி கூறினார். 


அதேநேரம் ஜாலான் சாங்காட் ஜோங் 3வது மைலில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மகா முத்தலம்மாள் ஆலய நிர்வாகம் அமைச்சரிடம் இருந்து 232,028.00 வெள்ளி மானியம் பெற்றுக்கொண்டனர். மானியம் வழங்கும் இந்த இரண்டு நிகழ்வுகள் மூலம் ஆலயங்களுக்கு நேரில் வந்து மாதிரி காசோலைகளை எடுத்து வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்.

Leave a Comment
Trending News