Alaioli
தெலுக் இந்தான் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

டிகே மூர்த்தி 

தெலுக் இந்தான் 07.12.2025ஜா  சாங்காட் ஜோங் 2 வது மைலில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகு நேர்த்தியுடன் நடத்தியுள்ளனர்.


இந்த ஆலய மேம்பாட்டுக்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் 70 ஆயிரம் வெள்ளி மானியம் மாநில அரசின் சார்பில் வழங்கியுள்ளார் என ஆலய நிர்வாகத்தினர் கூறினர்.


மேலும், இக்கோவிலுக்கான அலுவலகக் கட்டிடத்தை கடந்த 15.12.2024 இல் டத்தோ சிவநேசன் அதிகாரப்பூர்வமாகவும் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நடந்த கும்பாபிஷேகத்தில் வெளி மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான வர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது மகிழ்ச்சித் தரும் செய்தியாக உள்ளது.இத்தகைய சூழலில் இந்தக் கோவில் அமைந்துள்ள நிலம் ஆலயத்திற்கு உரிமையாக்கிட மாநில இந்திய சமூகத்தின் நல விவகாரத்திற்குப் பொறுப்பேற்றுள்ள டத்தோ சிவநேசன் பார்வைக்கு கொண்டுசெல்லப்படுகிறது என்றும் விவரித்தார்.


மாநில அளவில் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆலய நில விவகாரங்களை நிறைவேற்றும் கடமை, அணுகல் மூலம் விளைவுகளை உணர்ந்து செயல்படும் நிலை, அனைத்து ஆளுமையும் ஒருங்கே அமையப்பெற்றவர்.  மக்கள் பிரதிநிதி என்னும் தமது கடமையை நிறைவேற்றுவதில் சளைக்காதவர். 


60 ஆண்டு தீர்க்க முடியாத நிலப்பிரச்சினைகளையும் துணிச்சலாகவும் தீர்த்துள்ளார். மாநில இந்திய சமூகத்தைப் பாதுகாப்பது தமது ஆட்சிக்குழு பொறுப்பு என்பதில்  மக்கள் மத்தியில் உத்தரவாதம் ஆகத் திகழ்கிறார் என்றும் பாராட்டிப் பேசினார்.


Post ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News