Alaioli
ஜொகூர், பொந்தியானில் வெள்ளத்திற்கான அறிகுறி- தீயணைப்புத்துறை  விரிவான கண்காணிப்பு.

கோகி கருணாநிதி

பொந்தியான்டிச 7 —பொந்தியான் மாவட்டத்தில் ஏற்படும் அதிக டல் அலையின் நீர் பெருக்கத்தால் ( Air Pasang Besar) மற்றும் வெள்ள அபாயத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொந்தியான் பாரு தீயணைப்புத்துறை இன்று காலை முதல் மதியம் வரை விரிவான கண்காணிப்பை மேற்கொண்டது. காலை 11.15 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கை, கடல் அலையின் நீர் பெருக்கத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தடுக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது.



இந்த கண்காணிப்பில் தீயணைப்புப் பிரிவின் மூன்று முக்கிய மீட்புப் பொறிகள்—LFRT வாகனம், EMRS வாகனம் மற்றும் ஹைலக்ஸ்—பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 11 பேர் கொண்ட குழு பொந்தியான் வர்த்தக மையம், ரம்பா கடற்கரை, குக்குப் துறைமுகம் மற்றும் தஞ்சோங் பியா தேசியப் பூங்கா ஆகிய நான்கு முக்கிய இடங்களில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டது.

கண்காணிப்பு நேரத்தில் வானிலை தெளிவாகவும் மழையில்லாமலும் இருந்தது. எனினும் சில பகுதிகளில் நீர்மட்டம் உயர்வடைந்திருந்தது பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக 3.6 மீட்டர் உயரம் வரை அலை மட்டம் சென்றடைந்திருந்தாலும், நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.


கடல் நீர்  மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதை முன்னிட்டு, பொம்பா குழுவினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசியமான பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் வழங்கினர். குறிப்பாக மின்சார கோளாறுகள் அல்லது அபாயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, வீடுகள் மற்றும் வளாகங்களில் நீர் புகும் நிலைமைக்குத் தொடர்ந்து கண்காணிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. நீர்மட்டம் மேலும் உயரும் நிலையோ அல்லது கடும் மழை பெய்யும் சூழ்நிலையோ உருவானால், தேவையானபோது இடம்பெயரத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தினர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News