Alaioli
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நிறைவு

கோகி கருணாநிதி

ஸ்கூடாய்டிச.7-ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் தொடக்கக் கல்விப் பயணத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா, பெற்றோர்–ஆசிரியர்கள் அனைவரின் பெரும் ஆதரவுடன் உயரிய மரியாதையும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழலில் நடைபெற்றது.



பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மாணவர்கள் அறிவு, ஒழுக்கம் மற்றும் நல்வாழ்வின் அடித்தளத்தை வலுப்படுத்தி இடைநிலைப்பள்ளிக்குச் செல்ல தயாராகின்றனர் என்பதை ஆசிரியர்கள் பெருமிதத்துடன் வலியுறுத்தினர். தலைமை ஆசிரியர் சு. தமிழ்ச்செல்வி அவர்கள், மாணவர்கள் புதிய கல்விக் கட்டத்தில் தன்னம்பிக்கை, உழைப்பு மற்றும் தெளிவான இலக்குடன் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



அவரது உரையில், தொடக்கக் கட்டத்தில் மாணவர்களை நன்கு வடிவமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்ததுடன், பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு உறுதியான ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.


அவரது உரையில், தொடக்கக் கட்டத்தில் மாணவர்களை நன்கு வடிவமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்ததுடன், பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு உறுதியான ஆதரவாக இருக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.ஆறாம் ஆண்டு வகுப்பாசிரியர்களான ஶ்ரீவித்யா,  யோகேஸ்வர்,  ரேவதி,  சிவசங்கரி உள்ளிட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த பங்களிப்பால் நிகழ்வு சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டது.


விழாவின் சிறப்பு விருந்தினராக சமூக மருத்துவநல சேவைத் தலைவரும் ADAM மருந்தக உரிமையாளருமான மருத்துவர் பி. நாகராஜ் கலந்து கொண்டு, மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் கல்வியை முக்கிய முன்னுரிமையாகக் கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று வலியுறுத்தினார். அவர் 140 பட்டமளிப்பு மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.


மேலும், மருத்துவர் நாகராஜ் இந்நிகழ்வின் முக்கிய மேடை அலங்காரச் செலவை அனுசரணையாக வழங்கியதுடன், இஸ்கந்தார் புத்திரி மாநகராட்சி மன்ற உறுப்பினர்  வெ. சங்கர பாண்டியன் அவர்கள் மண்டப அமைப்பு மற்றும் முகாம் ஏற்பாட்டுக்கு ஆதரவு அளித்தது விழாவுக்கு மேலும் சிறப்பைக் கூட்டியது.
பெற்றோர்களின் பெருமளவு பங்கேற்பு மற்றும் குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடிய அவர்களின் மகிழ்ச்சி, விழாவின் சூழலை மேலும் மகத்தான ஒன்றாக மாற்றியது.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News