Alaioli
ராம் கர்ப்பால் சுழல்கிண்ண கால்பந்துப் போட்டியில் பல்வேறு குழுக்கள் உற்சாகத்துடன் பலப்பரீட்சை!

பினாங்கு, டிசம்பர் 9 - பினாங்கு மாநில புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர், ராம் கர்ப்பால் சிங் சுழல்கிண்ண கால்பந்துப் போட்டியில், மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள்,  உற்சாகத்துடன் களமிறங்கி வாகையராக தங்களை நிலை  நிறுத்திக் கொள்ளும் லட்சிய உணர்வுடன், கடுமையாக பலப்பரீட்சை நடத்தின.


ஜாலான் மஸ்ஜீட் நெகிரி, கிராமிய சமூக மேலாண்மை  மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த கால்பந்துப் போட்டி ஜாலான்  டத்தோ கிராமட் சாலையிலுள்ள பாடாங் பிரவுன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வேளையில், இப்போட்டியை நேரில் கண்டு களிக்கும் ஆவலில் எண்ணற்ற பார்வையாளர்களும்  கால்பந்து ரசிகர்களும் நிகழ்விடத்தில் குழுமியிருந்து ஒவ்வொரு சுற்றுகளையும் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.


இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைத்து  அணியினருக்கும் ஊக்கத் தொகைகள் வழங்கிடவும், ஒவ்வொரு அணிகளுக்குமிடையிலான பலப்பரீட்சையை தாமே கண்டு  மகிழ்ந்திடவும், இங்கு நேரிடையாக களமிறங்கியிருந்த ராம் கர்ப்பால், கால்பந்து வீரர்களிடமும் அளவளாவி, அவர்களுக்கு தனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.


அணிகளுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும்  நோக்கத்தை உயர்வெனக் கொண்டு ஓவ்வொரு வீரர்களும் ஒழுக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும், இதுவே  போட்டி மனப்பான்மையைக்  கண்ணிய உணர்வுடன் எதிர்கொள்ள  பெரிதும் துணை நிற்குமென்று, வீரர்களிடத்தில் ராம் கர்ப்ப்பால் அறிவுறுத்தினார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News