Alaioli
புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

தி. கிரிஷன் 

கோலாலம்பூர் டிசம்பர் 16 : பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புதிய அமைச்சரவைக் பட்டியலை அறிவித்தார். இந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் அமைச்சர்கள் சிலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், சிலர் அமைச்சக மாற்றத்திற்கும், புதிய நியமனங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.


பிரதமரின் அறிவிப்பின்படி, டத்தோ ஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தபா வகித்து வந்த பிரதமர் துறையின் அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) பதவிக்கு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர்  ஹன்னா யோவ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஹன்னா யோவ் வகித்து வந்த பதவிக்கு, சுங்கைபட்டாணி  நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முகம்மது தௌஃபிக் ஜோஹாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


அதனைத் தொடர்ந்து ஸ்டீவன் சிம் அவர்கள் வகித்து வந்த பதிவியான மனிதவள அமைச்சர் பதவியில் தற்போது டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவன் சிம் அவர்கள் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்துக்கு தற்போது பொறுப்பு வகித்துள்ளார். 


அதனையடுத்து டத்தோ ஸ்ரீ டாக்டர் நோரைனி அக்மத் பெருந்தோட்டம், பொருள்கள் அமைச்சராகவும், டத்தோ ஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப் அவர்கள் மலேசிய இயற்கை வளங்களும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் அமைச்சராகவும் டாக்டர் ஸுல்கிஃப்லி ஹசன் மலேசியப் பிரதமர் துறை அமைச்சரின் (மத விவகாரங்கள்) பிரிவின் அடிப்படையிலும்  அக்மல் நஸ்ருல்லா முகமது நாசிர் பொருளாதார அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.


தொடர்ந்து, டத்தோ முஸ்தபா சாக்முட் அவர்கள் பிரதமர் துறையின் அமைச்சரில் சபா–சரவாக் விவகாரங்கள் பிரிவின் அடிப்படையிலும், டத்தோ ஸ்ரீ ஜவஹாரி அப்துல் கனி அவர்கள் மலேசிய முதலீடு, வணிகம், தொழில்துறை அமைச்சராக(MITI) நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார்.


இந்த அமைச்சரவை மறுசீரமைப்பில் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக,

பிரதமர் துறையின் அமைச்சர் (மத விவகாரங்கள்) பிரிவில் உள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தபாவும் டத்தோ டாக்டர் முகமது நயிம் முக்தார் ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து, மறுசீரமைப்பில் இடம்பெற்ற துணை அமைச்சர்கள் பட்டியலையும் பிரதமர் வெளியிட்டார். அதன்படி, பயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ட்ஸே ட்ஸின்  அவர்கள் முதலீடு, வணிகம், தொழில்துறையின் துணை அமைச்சராகவும்(MITI) முகமது அலாமின் அவர்கள் தொழில் முனைவோரும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சராகவும், லியூ சின் டோங் அவர்கள் நிதி துணை அமைச்சராகவும்  மர்ஹமா ரோஸ்லி அவர்கள் மத விவகாரங்கள் பிரிவினுள்ள பிரதமர் துறை துணை அமைச்சராகவும், லோ சூ ஃபுய் அவர்கள் கூட்டரசு பிரதேசப் பிரிவின் பிரதமர் துறை துணை அமைச்சராகவும் டத்தோ சான் ஃபூங் ஹின் அவர்கள்  விவசாயம், உணவுப் பாதுகாப்பு துணை அமைச்சராகவும் ஆடம் அட்லி அவர்கள் கல்வி துணை அமைச்சராகவும், டத்தோ லுகானிஸ்மன் அவாங் சவுனி அவர்கள் வெளிநாட்டு விவகாரத் துணை அமைச்சராகவும் லிம் ஹுய் யிங் அவர்கள்  மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சராகவும் சூ சுக் மான் அவர்கள்  சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துணை அமைச்சராகவும் என நியமிக்கப்பட்டுள்ளனர்.


Menteri:

1. Menteri Wilayah Persekutuan: Hannah Yeoh

2. Menteri Sabah dan Sarawak: Datuk Musfata Sakmud

3. Menteri Hal Ehwal Agama: Dr Dzulkefly Hassan

4. Menteri Pelaburan, Perdagangan dan Industri: Datuk Seri Johari Abdul Ghani

5. Menteri Pembangunan Usahawan, Koperasi dan PMKS: Steven Sim Chee Keong

6. Menteri Ekonomi: Akmal Nasrullah Mohd Nasir

7. Menteri Sumber Asli dan Kelestarian Alam: Datuk Seri Arthur Joseph Kurup

8. Menteri Perladangan dan Komoditi: Datuk Seri Noraini Ahmad

9. Menteri Sumber Manusia: Ramanan Ramakrishnan

10. Menteri Belia dan Sukan: Tawfiq Johari


Timbalan Menteri:

1. Timbalan Menteri Wilayah Persekutuan: Loh Su Fui

2. Timbalan Menteri Hal Ehwal Agama: Marhamah Rusli

3. Timbalan Menteri Kewangan: Liew Chin Tong

4. Timbalan Menteri Peralihan Tenaga dan Transformasi Air: Datuk Seri Abdul Rahman Mohamad

5. Timbalan Menteri Pertanian dan Keterjaminan Makanan: Chan Foong Hin

6. Timbalan Menteri Luar Negeri: Lukanisman Awang Sauni

7. Timbalan Menteri Pembangunan Wanita, Keluarga dan Masyarakat: Lim Hui Ying

8. Timbalan Menteri Pendidikan Tinggi: Adam Adli Abd Halim

9. Timbalan Menteri Pelancongan, Seni dan Budaya: Chiew Choon Man

10. Timbalan Menteri Perpaduan: R. Yuneswaran

11. Timbalan Menteri MITI: Sim Sze Tzin

12. Timbalan Menteri Kesihatan: Datuk Hanifah Hajar Taib

13. Timbalan Menteri Pembangunan Usahawan dan Koperasi: Datuk Muhammad Alamin

14. Timbalan Menteri Ekonomi: Datuk Mohamad Shahar Abdullah

15. Timbalan Menteri Sumber Asli dan Kelestarian Alam: Syed Ibrahim Syed Noh

16. Timbalan Menteri Perladangan dan Komoditi: Datuk Seri Huan Tiong Sii

17. Timbalan Menteri Sumber Manusia: Datuk Khairul Firdaus Akhbar Khan

18. Timbalan Menteri Belia dan Sukan: Mordy Bimol

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News