Alaioli
காஜாங் நகராண்மைக்கழக உறுப்பினராக சங்கீதா தினகராஜன் நியமனம்

எஸ்.எஸ்.மணிமாறன்

காஜாங் ஜன.10.  காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினராக சங்கீதா தினகராஜன் நியமனம் பெற்றார். காஜாங் நகராண்மைக் கழகத்தின் தலைவர் துவான் நஸ்லி முகமட் தாயிப் முன்னிலையில், சத்திய பிரமாணம் செய்து பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டதோடு, பதவி சாசன ஒப்பந்தத்தில் தாம் கையெழுத்திட்டு சட்டதிட்டங்கள்படி நடந்து கொள்வதாக அவர் தெரிவித்தார். 


இவ்வாண்டில் தெரிவு முறையில் தாம் டிஏபி கட்சி சார்பில் இந்த வாய்ப்பு தமக்கு வழங்கப்பட்டதாக அவர் பின்னர் அலை ஒளி செய்தியாளரிடம் கூறினார்.


முன்னதாக, காஜாங் நகராண்மைக்கழக சிறப்பு கூட்ட அறையில் நடைபெற்ற பதவி பிரமாண சடங்கை வழி நடத்திய அதன் தலைவர் நஸ்லி, பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டவர்களின் பதவி காலம் ஜனவரி 2026 முதல் டிசம்பர் 2027 வரை ஈராண்டுகள் வரை நீடிக்கும் என்பதால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பெறப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை அவர் முன் வைத்து அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.


இன்னும் விடுபட்டு வெளியே காத்திருக்கும்  நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு பதவி உறுதி மொழி சடங்கு பிறிதொரு நாளில் நடைபெறவிருப்பதாக சங்கீதா அலை ஒளியிடம் தெரிவித்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News