Alaioli
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் திட்டத்தில் 100 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பு...வீ. கணபதி ராவ் தகவல்.

 எஸ்.எஸ்.மணிமாறன்.

கிள்ளான் ஜன.10 மீண்டும் பள்ளிக்குப் போகலாம் எனும் திட்டத்தில் இவ்வட்டாரத்தில் இருக்கும் மூவின மாணவர்களுக்கும் கிள்ளான் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் வாயிலாக 100 மாணவர்களுக்கு புத்தகப்பைகளை தாம் அன்பளிப்பு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.


ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பிள்ளைகளை அடையாளம் கண்டு மக்கள் சேவை மையம் தமது பார்வைக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து,  இன்று காலையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அழைக்கப் பட்டிருந்த மாணவர்கள் அனைவருக்கும் தாம் புத்தகப் பைகளை எடுத்து வழங்கியதாக பின்னர் அலை ஒளி செய்தியாளரிடம் கூறினார்.


ஏழ்மை என்பது அனைத்து தரப்பினரிடமும் உள்ளது என்பதால் மாணவர்களின் பெற்றோரின் சுமைகளைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டதாக கணபதிராவ் தெரிவித்தார். கிள்ளான் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியை நேர்த்தியாக வழி நடத்தியதாக அவர் அலை ஒளியிடம் கூறினார்.


நாளை மறுநாள் 12.1.2026 திங்கட்கிழமை அன்று காலையில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் புத்தம் புதிய பத்தகப்பைகளுடன் பள்ளிக்கு உற்சாகமாக செல்ல வேண்டும் கல்வியைச் சிறப்பாகக் கற்க வேண்டும் என்ற பொதுநல எண்ணத்தில் இந்தப்பணியை தாம் முன்னெடுத்து செய்தததாக கணபதிராவ் கூறினார்.



Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News