Alaioli
சுபாங் ஜெயா பண்டாராயா உறுப்பினர்களாக 6 இந்தியர்கள் நியமனம்.

எஸ்.எஸ்.மணிமாறன்

சுபாங் ஜெயா ஜன.10.  சுபாங் ஜெயா பண்டாராயா உறுப்பினர்களாக 6 இந்தியர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்றனர். புத்தாண்டில் தெரிவு செய்யப்பட்ட 24  உறுப்பினர்களில் இம்முறை அறுவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு பண்டாராயா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதாக மீனாட்சி சுந்தரம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


சுபாங் ஜெயா பண்டாராயா பீளேக் கெனாங்கா சிறப்பு கூட்ட அறையில், டத்தோ பண்டார் டத்தோ அமிருல் அஸிஸான் பின் டத்தோஸ்ரீ அப்துல் ரஹிம் முன்னிலையில் நடைபெற்ற சத்திய பிரமாண நிகழ்ச்சியில் பதவி உறுதி மொழி சடங்கில் பங்கேற்று பதவி சட்ட விதிகளை மதித்து பதவி ஒப்புதல் கடிதத்தில் தாம் கையொப்பமிட்டு பதவியை ஏற்றுக் கொண்டதாக அவர் கூறினார். 


இந்தப் பதவிக்கான காலம் ஜனவரி 2026 இல் தொடங்கி வரும் டிசம்பர் 2027 வரை ஈராண்டுகள்  நீடிக்கும் என்று மீனாட்சி அலை ஒளியிடம் கூறினார்.  புதிதாக தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்றவர்களுக்கு வரும் திங்கட்கிழமை அன்று அவர்களது வேலைக்கான முறையான அடிப்படை பயிற்சிகள் தேர்ச்சிப் பெற்ற பயிற்றுநர் வழி நடத்திச் செல்வார் என்று அவர் தெரிவித்தார்.


தெர்வு செய்யப்பட்ட பண்டாராயா பழைய புதிய உறுப்பினர்களுக்கு டத்தோ அமிருல் அஸிஸான் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News