Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
பத்துமலை பிப்.2. ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜின் ஏற்பாட்டில் பத்துமலை முருகன் திருத்தலத்தில் அமைந்திருந்த தண்ணீர்ப் பந்தல் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைக் கவர்ந்தது எனலாம். துணை அமைச்சர் யுனேஸ்வரனின் நேரடிக் கண்காணிப்பில் அவரது அமைச்சின் அதிகாரிகள் சிலரும் களத்தில் இறங்கி பக்தர்களுக்கு தண்ணீர்ப் பந்தலில் தேவையான குளிர் பானங்களை எடுத்து வழங்கினர்.
ஒற்றுமைத் துறை அமைச்சின் துணை அமைச்சராகப் பதவியேற்றப் பிறகு முதல் முறையாக இங்கு தண்ணீர்ப் பந்தல் அமைத்து பல்லாயிரம் பக்தர்களை நேரில் சந்தித்துப் பேசும் ஒரு நேரடி வாய்ப்பு தமக்கு கிட்டியதாக யுனேஸ்வரன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
தைப்பூசத் திருவிழா அன்று கால் சுடும் அளவுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிகளை ச் செலுத்த வருகை தந்திருந்த வேளையில் தண்ணீர்ப்பந்தலில் பலரைச் சந்தித்து பேசும் இனிய தருணம் அமைந்தது.
அதே வேளையில், அமைச்சர் பெருமக்கள் பலருடன் நாடாளுமன்ற அவையில் தாம் வீற்றிருந்த வேளையில் இந்தச் சமூகத்திற்கு நாம் என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேளையில் பத்துமலை தைப்பூசம் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து நடத்திட திருமுருகன் அருள் கடாட்சம் தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்ததாக அவர் அலை ஒளியிடம் கூறினார்.
மனித நேய அடிப்படையில் பக்தர்கள் வெயிலின் வெட்பத்தைத் தணித்துக் கொள்ள தாகத்தைப் போக்கிக் கொள்ள தாம் இந்த ஏற்பாட்டை தமது அமைச்சின் பேராதரவுடன் செய்திருந்ததாக அவரது உரையில் குறிப்பிட்டார்.
பேராக்
சுகாதார நலத்திட்டங்கள் மக்களை சென்றடையச் செய்வோம் ; சட்ட மன்றத்தில் பதிலளித்தார் டத்தோ சிவநேசன்..!
சிலாங்கூர்
இறைச்சி வெட்டும் கத்தியால் போலீஸ் அதிகாரியைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆடவருக்கு ரிம.9,100 அபராதம்
கோலாலம்பூர்
Mi segera kini berperisa nasi lemak
ஜொகூர்
Gangguan bekalan air berjadual di daerah Johor Bahru, Kota Tinggi dan Pontian
கோலாலம்பூர்
Piala Thomas 2026: Malaysia 'kuda hitam' di Denmark, kata Zii Jia
கால்பந்து
Piala Dunia 2026: FIFA desak Donald Trump tangguh operasi ICE, bimbang cetus kekacauan
கோலாலம்பூர்
Himpunan GARAH: Anwar, kerajaan dan lima lain diarah fail pembelaan sebelum 21 Mei depan
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வாழும் சீக்கிய பெருமக்களுக்கு வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துகள்