Alaioli
கூலிம், லுனாஸ் மே 13- வெல்லஸ்லி லுனாசில் அமைந்துள்ள அருள் மிகு மகா முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற ரத ஊர்வலம் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்வை சிறப்பிக்க, கெடா ஓரியண்டல் ரியலிட்டி வீடமைப்பு நிறுவனம் தனது கூலிம்-லுனாஸ் சாலையிலுள்ள அலுவலக வளாகத்தில் பிரமாண்டமான தீபாராதனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில், ஓரியண்டல் ரியலிட்டி நிறுவன இயக்குநர் திரு. சங்கரன் முனியாண்டி தலைமையேற்று, நிறுவன ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஊர்வலத்தைச் சிறப்பித்தனர்.
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும், லுனாஸ் காவல் நிலையத் தலைவர் திரு. பால்பிர் சிங் அவர்களின் தலைமையில் காவல் துறையினரால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
ஊர்வலத்தின் போது நாதஸ்வரம், கோலாட்டம், கரகாட்டம், சிங்க நடனம் உள்ளிட்ட பல்வேறு இன மக்களின் கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று, மகிழ்ச்சியுடனும் ஆனந்தத்துடனும் விருந்தினர்களை வரவேற்றன்
இந்த நிகழ்வு, நமது பண்பாட்டு அடையாளத்தையும் ஆன்மீக உந்துதலையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கெடா ஓரியண்டல் ரியலிட்டி நிறுவனம் இதுவரை RM 2 லட்சம் முதல் RM 5 லட்சம் வரை விலையிலான 800 வீடுகளை இந்திய சமூகத்தினருக்கு வழங்கி, சொத்துரிமையை மேம்படுத்தும் பணியில் பெரும் பங்காற்றியுள்ளது. இந்தியர்கள் சொத்துக்களை, குறிப்பாக வீடுகளை, பெறுவது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்திய இயக்குநர் சங்கரன் முனியாண்டி, இந்த நோக்கத்துடன் மேலும் மக்கள் வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குவதில் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதாக ‘அலை ஒளி ஊடகத்திடம் தெரிவித்தார்.
பினாங்கு
அகதிகளுக்கான உலகளாவிய பாதுகாப்புக் காவலரின் மலேசியப் பிரதிநிதி பினாங்கு மேயருடன் சந்திப்பு!
ஜொகூர் பாரு
ஜொகூர் மாநில உள்ளூர் அதிகாரம் மன்ற உறுப்பினர்கள் மாநாடு 2025–ஐ டத்தோ’ ஜஃப்னி திறந்து வைத்தார்.
பினாங்கு
தலைநகரின் ஷா அலாம் நகரசபை ஊழியர்கள் பினாங்கு மாநகர் மன்றத்திற்கு நல்லெண்ண வருகை!
சிலம்பம்
Penang Silambam Team Set to Compete at BMAEX Tournament 2025 in Labuan
கூலிம்
கான்கிரீட் கலவை லாரியுடன் மோதியதில் கூலிமில் 17 வயது மாணவர் உயிரிழப்பு
கால்பந்து
பிரிமியர் லீக்: அர்செனல் இரு கோல் வித்தியாசத்தில் எதிரியை வீழ்த்தியது
சபா
Sabah Mourns the Passing of Bung Moktar Radin