ஜூரு தோட்டத்தில் அருள்பாலிக்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று காலை ஆன்மிகக் கோலாகலத்துடன் நடைபெற்றது.
இந்த ஆண்டுத் திருவிழா பூஜை, ஆலய தலைவர் திரு வெள்ளிப்புத்தன் கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. சன்னதியின் சீர்வரிசைகளோடு, சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி பரவசத்தில் இறைவனை வழிபட்டனர்.
100 ஆண்டுகளுக்கும் மேல் ஆன்மிகச் சிறப்புடன் திகழும் இந்த ஆலயத்தில் மதுரை வீரன், காளியமடபாள் நாகம்மா ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.
பதிவு பெற்ற ஆலயமாகத் திகழும் ஜூரு ஶ்ரீ முனீஸ்வரர் திருக்கோயில், ஜூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்மிகமும், குலதெய்வ வழிபாட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்குகிறது.
இந்த ஆண்டுத் திருவிழாவில், ஜூரு தேவி ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் திரு யோகேஸ்வரன் இராஜேந்திரன், ஜூரு குடியிருப்பாளர் சங்கத்தின் செயலாளர் திரு. மகேந்திரன், துணை செயலாளர் திரு. ஆர். ரமணி, ஆலோசகர் திரு. மா. இராஜகோபால் உள்ளிட்டோர் சுற்று வட்டார பக்த பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.
*அலைஒலி செய்தி*