"இளைஞர்கள் கால்பந்து துறையில் இளம் வயதிலேயே ஈடுபட வேண்டும்":டாக்டர் சின்னையா
இளைய தலைமுறை கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கத்தில் சுங்கைப் பட்டாணி வட்டாரத்தில், கேசவன், இராஜா மற்றும் பிற கால்பந்து ஆர்வலர்களின் உதவியுடன், இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான 15 வயதிற்குட்பட்ட கால்பந்து கிண்ணப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
சுங்கைப் பட்டாணி பத்து டுவா மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கால்பந்து போட்டியை தொழிலதிபர் டாக்டர் சிங்கப்பூர் சின்னையா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இளைஞர்கள் கால்பந்து மட்டுமல்லாமல் பிற விளையாட்டு துறைகளிலும் ஈடுபட வேண்டும் என்றும், அதற்காகப் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்த நாட்டின் விளையாட்டு துறையை இந்தியர்கள் ஒருகாலத்தில் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். தற்போது அந்த நிலை குறைந்துள்ளதாகக் கூறிய டாக்டர் சின்னையா, அதனை மீண்டும் புத்துயிர் கொள்ளும் நோக்கில், கேசவன், இராஜா மற்றும் பலரின் ஒருங்கிணைப்புடன் இளம் வயது மாணவர்களுக்கான கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதைப் பாராட்டினார்.
இளைய இந்திய கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில், இந்த 15 வயதிற்குட்பட்ட இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது என ஏற்பாட்டுக் குழுவினரான கேசவன் மற்றும் இராஜா தெரிவித்தனர்.
இந்தக் கால்பந்துப் போட்டியில் முதல் நிலை வெற்றியாளராகப் பிலேக் லாயஆன்ஸ் ஏ குழுவும் இரண்டாம் நிலையில் பிலேக் லாயான்ஸ் பி குழுவும் முன்றாம் நிலையில் போயா எப்ஃசி குழுவும் கே7 குழுவும் நான்காம் நிலை வெற்றியாளர்களாகத் தேர்வுப் பெற்றனர்.