Alaioli
இளையோர் மத்தியில், புழக்கத்தில் இருக்கும் போதைப் பொருள் பழக்கம், விநியோகம், நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினரின் தீவிர பங்களிப்பு தேவை .பாப்பா ராய்டு வேண்டுகோள்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம் ஏப்ரல் 8.  இளையோர் மத்தியில் புழக்கத்தில் இருந்து வரும் போதைப் பொருள் நடமாட்டம், விநியோகம் , பயன்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி அவற்றை முற்றாகத் துடைத்தொழிக்கும் கூடுதல் நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் ஆலோசனை விடுத்தார்.


நாட்டில் அதிகரித்து வரும் இளையோர் மத்தியில் புழக்கத்தில் இருக்கும் போதைப் பொருள் பழக்கம் அதன் நடமாட்டம் காரணமாக, அதனால் சாலைகளில் நிகழும் தொடர் சாலை விபத்துகளில் தேவையில்லாமல் உயிர்ச் சேதங்களும் அதிகப் பட்ச பாதிப்புகளும் ஏற்படுவதைத் தவிர்க்கவும் தடுக்கவும் போதைப் பொருள் ஒழிப்புத் துறை அதிகாரிகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை அவர் முன் வைத்தார்.


போதைப் பொருள் சம்பவங்களால் நிகழும் தொடர் சாலை மரணங்கள் தொடர்பில் விட்டுக் கொடுக்கும் போக்கை காவல் துறையினர் பின் வாங்காமல் நீதியை நிலை நாட்டும் வகையில் உரியவர்களுக்கு தக்க தண்டனை வழங்க அதிகாரிகளின் பணி உண்மையாக இருக்க வேண்டும் என்று பாப்பா ராய்டு என்று தமது கருத்தை வெளியிட்டார். இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பழக்கம் விநியோகம் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினர் மேற்கொண்டு வரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாக பாப்பா ராய்டு கூறினார்.


எனினும், இந்த நடவடிக்கை செயல்பாடுகள் அதிகரிக்கப் பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தற்போது நாட்டில் அடிக்கொரு தடவை நிகழ்ந்து வரும், சாலை விபத்துகளில் முக்கியமாக மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வரும், போதைப் பொருள் உட்கொண்டு சாலைகளில் பயணிக்கும் சில வாகனமோட்டிகளால் நடக்கும் மோசமான விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க போதைப் பொருள் பழக்கம் விநியோகம் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வர வேண்டும் என்ற ஆலோசனையை பாப்பா ராய்டு முன் வைத்தார்.

Leave a Comment