Alaioli
செய்த தவறால் சிறைவாசம் அனுபவிப்போர், மாநில அரசின் வேலை வாய்ப்புகளைப் பெற்று நல்ல மனிதராய் சமூகத்துடன் இணைந்து வாழ்வீர்.பாப்பா ராய்டு மனிதநேய ஆலோசனை.

எஸ்.எஸ்.மணிமாறன்.

காஜாங். ஏப்ரல் 8. சிறிய தவறோ, பெரிய தவறோ அல்லது நிதானம் இல்லாமல் பதட்டத்துடன் ஒரு வேகத்துடன் செய்த தவறோ, எதுவாக இருப்பினும் அதற்கான தண்டனையை சிறிது காலம் காஜாங் சிறைச்சாலையில்  அனுபவித்து வரும் இளையோரும் நடுவயதினரும் அவர்கள் குடும்ப நலன் கருதி மீண்டும் இணைந்து வாழும் ஒரு முயற்சியாக சிலாங்கூர் மாநில-


அரசின் வாயிலாக வழங்கப்படும் வேலைகளை ஏற்று உழைத்து வாழ்வாதாரத்தைத் தேடிக் கொண்டு மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கு உரிய நடவடிக்கைகளை மனித நேய அடிப்படையில் தாம் முன்னெடுத்து செயல்படுத்த விருப்பதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


மாநில அளவில் செயல்படும் 10 நிறுவனங்கள் முன்வந்து வழங்கவிருக்கும 1,500 வேலை வாய்ப்புகளுக்கான காலி இடங்களை நிரப்பும் வகையில்,  காஜாங் சிறைச்சாலையில் இருந்து வரும் சிறைவாசம் அனுபவித்த கைதிகள் மனம் திருந்தி மனிதர்களாக மாறி சமூகத்தோடு இணைந்து அவர்களும் உழைத்து நன்மை பெற வேண்டும் என்ற திட்டத்தை காஜாங் சிறைச்சாலை-


இயக்குநர் ஒய்டி எச், டிகேபி முகமட் ஷாரின் ஹாஜி சப்து மற்றும் சிலாங்கூர் மாநில சொக்சோ நிறுவன இயக்குநர் முகமட் ரஷிட் ஒஸ்மான் ஆகியோரின் ஒருமித்த ஆலோசனை ஆதரவுடன் இந்த நடவடிக்கை வெற்றி பெற தாம் களத்தில் இறங்கியதாக அவர் கூறினார். 


6இந்த நடவடிக்கை வாயிலாக, அறிந்தே தவறு செய்தோரும் சிறை வாச காலத்தில் உணர்ந்து தெளிவுபெறும் வகையில் மீண்டும் சமூகத்துடன் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வாழ்வதற்கும் வருமானத்தைத் தேடி வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்வதற்கும் வேலை வாய்ப்புகளை மாநில அரசு முன் வந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்த விருப்பதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். இந்த நிகழ்ச்சியில், காஜாங் சிறைச்சாலை அதிகாரிகள், அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment