குவாலா கிராய்
கம்போங் சுங்கை சாம் இடத்தில் பேருந்து மீது கார் ஒன்று மோதியதில் இரண்டு பெண்களும் ஓர் ஆணும் இன்று உயிரிழந்தனர்.
காலை 11.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் "பேரொடுவா மைவி" ரக காரில் பயணித்த மூவரும் சிக்கிக் கொண்டதுடன், பஸ் ஓட்டுநர் சிறு காயங்களுக்கு உள்ளானார் என சீனார் ஹரியான் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலதிக நடவடிக்கைக்காக காவல் துறையினரிடம் தகவல் கூறப்பட்டதாகவும் குவாலா கிராய் தீயணைப்பும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தலைவரும், மூத்த தீயணைப்பு அதிகாரி ஆன அகமது இட்ரிஸ் முகமட் தெரிவித்தார்.
நசுங்கிய மகிழுந்தில் சிக்குண்டவர்களை அகற்ற சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தினோம் என்று அவர் தமது அறிக்கையில் கூறினார்.
இதற்கிடையில், குவாலா கிராய் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் மஸ்லான் மாமத்தை தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.