Alaioli
*அமைச்சரவை மாற்றத்தில் அவசரம் இல்லை: பிரதமர் அன்வார்*

கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

இது தொடர்பாக, PKR கட்சியின் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதுடன், அம்னோவின் தெங்கு ஸப்ருல் அம்னோவிலிருந்து விலகி கெஅடிலானில் சேர்ந்ததாக அறிவித்துள்ளார்.

அதையடுத்து, அமைச்சரவையில் மாற்றம் செய்வதைப்பற்றி எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் அதிகாரப்பூர்வ விவாதம் நடத்தப்படவில்லை என பிரதமர் கூறினார்.

இதனால், அவசர முடிவுகள் எடுக்க வேண்டிய நிலைமை இல்லை என்றும் அவர் வலியுறுத்தி கொண்டார்.

Leave a Comment
Trending News