சுங்கை பட்டாணி, ஜூன் 2 -
தமிழ் சினிமா பாடல்களுக்குச் செல்வாக்கான தத்துவங்களை வாரி வழங்கிய கவியரசு கண்ணதாசனின் திரைப்பாடல்களின் ஆழமான கருத்துக்களையும், வாழ்க்கை நெறிகளையும் பகிர்ந்து கொள்வதற்காக, சுங்கை பட்டாணியில் ஒரு மாபெரும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்த இலக்கிய விழா சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் ஆதரவுடன், கெடா மாநில எம்.ஜி.ஆர் மனிதநேய மன்றம் மற்றும் சங்கைப்பட்டாணி தமிழர் சங்கம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் ஜூன் 15, 2025 (ஞாயிறு), மாலை 5.30 மணியில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, \"கவியரசு கண்ணதாசனின் திரைப்பாடல்களின் தத்துவமும் – விளக்கும்\" என்ற தலைப்பில் கடார கலை மாமணி திரு. ஆர்.பி.எஸ். கலைமணி அவர்கள் கலையமுதமாக தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்வின் இடம்:
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம்,
DEWAN PERPUSTAKAN TINGKAT ATAS,
நூல் நிலையம் அரங்கம், மேல்மாடி, சுங்கை பட்டாணி.
நிகழ்வில் தலைமை வகிப்பவர்கள்:
டாக்டர் சின்னையா
டாக்டர் ஜோபினா PJK
சிறப்புப் பேச்சாளர்கள்:
தமிழ்த் தென்றல் ஞானச்செல்வன்
முனைவர் S.D. கலையமுத்தன்,
M.A. (Tamil), M.A. (Public Administration), M.L., PhD
இலக்கியம், இசை மற்றும் தத்துவம் விரும்பும் தமிழர் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு அபூர்வ வாய்ப்பாக அமையும். கவியரசின் பாடல்கள் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை எளிய சொற்களில் ஆழமாகச் சிந்திக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளன. அவற்றை விளக்கும் இந்நிகழ்வு, செல்வாக்குடைய ஒரு சிந்தனைக்குப் பயணமாக அமையும்.
நுழைவு முற்றிலும் இலவசம்!
Entry Free – All are welcome!
தொடர்புக்கு:
RPS Kalaimani Peruval Shanmugam,
கடாரம், சுங்கை பட்டாணி.
தொலைப்பேசி: +60 16-420 2956.
இந்நிகழ்விற்கு உங்கள் வருகையால் சிறப்பூட்ட அழைக்கின்றோம்.
தமிழ்ச்செல்வத்தை விரிவாக்கும் இந்த விழாவில் உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்!