தி. கிரிஷன்
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பரதநாட்டிய பண்பாட்டுக் கழகமும், வளர்தமிழ் மன்றமும் இணைந்து திறன் மேடை 2025 Showdown 2025 எனும் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினர்.
மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி UPSI KAB மண்டபத்தில், 31/05/2025 அன்று குமாரி ஷாலினி அவர்களின் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்களாக மலேசியத் திரைப்பட நடிகர் ரவின் ராவ் அவர்களும், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களும், சிறப்பு நீதிபதிகளாக நடனத்தின் நாயகி துர்காஷினி விஜயன் அவர்களும், முன்னாள் UPSI பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மாணவி மற்றும் பாடகரான நிவாஷினி அறிவுக்கரசு அவர்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை அங்கீகரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாடல் போட்டியும் நடன போட்டியும் நடந்தேறியது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து போட்டியாளர்களுக்கு ஊக்கமளித்து வலுசேர்த்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் அற்புத நிகழ்ச்சியாக இந்த திறன் மேடை 2025 பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.