2027 ஆசியக் கோப்பைத் தகுதிச்சுற்றின் F குழுவின் இரண்டாவது ஆட்டத்தை முன்னிட்டு, மலேசியா தேசிய அணி ஹரிமாவ் மலாயா, வியட்நாமை எதிர்த்து நடைபெறவுள்ள ஆட்டத்திற்கு முன் தனது வியூகங்களைதத் திட்டமிட சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வருகிறது. இந்த போட்டி வருகிற செவ்வாய்க்கிழமை, பூகிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இதற்கான தயாரிப்பாக, கேப் வெர்டே அணியை எதிர்த்து நடைப்பெற்ற இரண்டாவது நட்புறவு போட்டியில், அணித் தலைவர் பீட்டர், அணியின் அனைத்து வீரர்களுக்கும் ஆட்ட நேரத்தை வழங்கி பலவீனங்களையும் பலத்தையும் ஆராய்ந்தார். இந்தப் போட்டி மூடப்பட்ட முறையில் நடத்தப்பட்டது.
அந்த ஆட்டத்தில், உலக தரவரிசையில் 72வது இடத்தில் உள்ள அணியால் தேசிய அணி 0-3 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.
வெளிநாட்டு அணிக்காக மூன்று கோல்களை \"ரோச்சா லிவ்ரமென்டோ\" முறையே 35வது மற்றும் 48வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார், அதே நேரத்தில் \"ஹெரிபெர்டோ டவாரெஸ்\" 55வது நிமிடத்தில் கோல் அடித்தார்.