நிலையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய நகர்ப்புற வாழ்க்கை முறையை ஆதரிப்பதற்காக, பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு மேலே அல்லது அருகில் புதிய பொது வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்மொழிந்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து சேவையை விரிவான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான ஒரு படியாக இவை விளங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீட்டுவசதி மேம்பாட்டில் குறைந்த வருமானம் கொண்ட குழுவிற்கு இதனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மிகவும் நிலையான, கட்டமைக்கப்பட்ட நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு இவை வழி வகுக்கும் என்கிறார்.
பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் வீடுகளை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது.
அதற்குச் சில சட்டத் திருத்தங்கள் தேவைப்படுவதாக மெனாரா பிரசரானாவில் நடைபெற்ற மலேசிய மடானி ஆய்வாளர்கள் மன்ற கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.