Alaioli
பட்டர்வொர்த் தீமிதி திருவிழாவில் 6 சங்கிலி பறிப்பு சம்பவம் – எஸ்.ஏ.சி. புஸ்பநாதன் கடும் எச்சரிக்கை.

பட்டர்வொர்த், ஜூன் 11 –


பட்டர்வொர்த் அருள்மிகு மகா மாரியம்மன் தேவஸ்தானம் நடத்தும் 122 ஆம் ஆண்டுத் தீமிதி திருவிழாவில், ஆறு சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன என்று பினாங்கு மாநில காவல் துறையின் மூத்த உதவிக் கண்காணிப்பாளர்  எஸ்.ஏ.சி.புஸ்பநாதன் வீரசிங்கம் தெரிவித்தார்.



இந்த சங்கிலி பரிப்பு சம்பவம் தொடர்பாக இது வரையில் 3 அதிராத்துவ புகார்கள் கிடைத்துள்ளதாகவும், இதன் தொடர்பாக தீவிரப் புலன் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாக அவர் கூறினார். இவ்விழாவை ஒட்டி, பொது மக்களின் பாதுகாப்பிற்காக காவல் துறையும், ஆலய நிர்வாகமும், மாநில குற்றத் தடுப்பு அறவாரியமும் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை பலமுறை முன்னெடுத்தும், மக்கள் தங்களது மதிப்புமிக்க தங்க நகைகளை அணிந்து வருவது தொடர்ந்து பறிப்பு சம்பவங்களுக்கு வழிவகுத்து வருவதாக அவர் வருத்தம் வெளியிட்டார்.


இது போன்ற திருவிழாக்களில் நகைகள் அணிந்து வருவது கொள்ளையர்களுக்கு வாய்ப்பளிக்கும். இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று எச்.ஏ.சி ( SAC) புஸ்பநாதன் தீவிர எச்சரிக்கை விடுத்தார்.



ஆலயத்தின் காவடி திருவிழா அன்று ஆலய அருகாமையில் காவல் துறையினர் தண்ணீர் பந்தல் அமைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும், தாகம் தீர்க்கும் சேவையிலும் ஈடுபட்டு வருகின்றனர். விழா பாதுகாப்புக்காக விரிவான போலீஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று நடைபெற்ற காவடி ஊர்வலத்தின் போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பினாங்கு மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பக்தர்களுடன் இரண்டுபட்டனர். காவல் துறை தண்ணீர் பந்தலில் இருந்து ஆலயத்திற்கு அதன் தலைவர் கணேசன் லெட்சுமணன் தமது நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பிடு  மேலத்தாகங்களோடு அதிகாரிகளை ஆலயத்திற்கு அழைத்து, சென்றார். மேலும், பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா. புலவேந்திரனும் நிகழ்வில் கலந்துகொண்டு, திருவிழாவிற்கு வருகிற பெண்கள் மதிப்புமிக்க தங்க நகைகளை அணிந்து வருவதைத்  தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.


இவ்வருட திருவிழாவில் ஏற்பட்ட சங்கிலி பறிப்பு சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையே கவலைக்கிடமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என காவல் துறை உறுதி தெரிவித்துள்ளது. இன்னும் 5 நாட்கள் தொடரும் திருவிழாவில் பொது மக்கள் கண்ணும் கருத்துமாக தங்கள் உடமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ புலவேந்திரன் வலியுறுத்தினார்.


Leave a Comment
Trending News