Alaioli
பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப மினி வேன்கள் – பினாங்கில் பயண வசதிக்கு நேரடி தீர்வு – போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்

ஜார்ஜ் டவுன், ஜூன் 10 -

பெரும் பேருந்துகள் செல்ல முடியாத இடங்களை கவனத்தில் கொண்டு, பயணிகளின் நிதானமான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில், ரேப்பிட் பஸ்சு நிறுவனம் 50 புதிய மினி வேன்களை சேவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, சமூகத்தின் இயல்பு மற்றும் தேவைகளை உணர்ந்ததின் விளைவாக எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.


அவர் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, “பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த இடங்களைத் தாக்கும் வகையில் இந்த மினி வேன்கள் பயணிகளை நேரடியாகவும் சுலபமாகவும் சேவையளிக்கின்றன,” எனக் குறிப்பிட்டார்.


13 மண்டலங்களைத் தாண்டும் சேவை விரிவாக்கம்

2024 ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, தற்போது பினாங்கு மாநிலத்தின் 13 மண்டலங்களில் இயங்கிவருகிறது. தீவுப் பகுதிகளில் 7 மற்றும் செபராங் பிறை பகுதியில் 6 மண்டலங்களில் இது விரிவடைந்துள்ளது.


பயணிகள் எண்ணிக்கையில் கணிசமான வளர்ச்சி

தொடக்கத்தில் தினசரி 159 பயணிகள் மட்டுமே பயணித்த நிலையில், மே 2025க்குள் இந்த எண்ணிக்கை சராசரியாக 492 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் தினசரி 1,944 பயணிகள் இந்த சேவையைப் பயன்படுத்தியுள்ளதோடு, மொத்த ரேப்பிட் பினாங்கு பயணங்களில் 4.1% பயணிகள் இந்த மினி வேன்களையே தேர்ந்தெடுத்துள்ளனர்.


திறமையான கட்டண வசதி – பயணிகள் விருப்பம் பெறும் பாஸ் வசதி

மினி வேன்கள் அனைத்திலும் ரொக்கமில்லா கட்டண வசதி அமைக்கப்பட்டுள்ளது. ரேப்பிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், க்யூஆர் கோட் மற்றும் ஈ-வாலெட் ஆகியவற்றின் வழியே கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. பயணிகள், முத்தியாரா மை50 பாஸ் மற்றும் ஓகேயு ஸ்மைல் பாஸ் போன்ற பாஸ் சேவைகள் மூலமாக வரம்பற்ற பயணத்தையும் அனுபவிக்க முடிகிறது. தற்போதைய பயணிகளில் 54 விழுக்காடு பேர் முத்தியாரா மை50 பாஸ் வாயிலாகவே இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர் என நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக விழிப்புணர்வு மற்றும் முன்பதிவு சலுகைகள்


சேவையின் பயன்பாடு மற்றும் பயன்களைப் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகள், முன்பதிவு செய்யும் பட்சத்தில், வெறும் ரிம 1.00 செலுத்தியே பயணத்தை அனுபவிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

சமூகத்தின் தேவையை பிரதிபலிக்கும் சேவை


 என்று ரேப்பிட் பஸ் செண்ட். பெர்ஹாட் நிறுவனத்தின் இயக்குனர்கள் தெரிவித்ததாவது, பினாங்கு ரேப்பிட் ஆன்-டிமாண்ட் சேவையின் மூலம் உள்ளூர் சமூகத்தின் தினசரி போக்குவரத்தை எளிமைப்படுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் முயற்சி தொடரும் என்றும், தஞ்சம் பூங்கா மற்றும் ஜார்ஜ் டவுன் ஆகிய பகுதிகளில் பயனீட்டாளர்களின் வருகை அதிகரித்திருப்பது இந்த சேவையின் தேவை மற்றும் தாக்கத்தை பிரதிபலிக்கிறது என்றனர்.

Leave a Comment
Trending News