அகமதாபாத்தில், ஜூன் 12 -
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில், ஒரு பயணி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி. எஸ். மாலிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ANI ஊடகத்துக்கு அவர் தொலைப்பேசி மூலம் அளித்த பேட்டியில், “அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில், சீட் எண் 11A-ல் பயணித்த ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்ற பயணி உயிருடன் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விமான விபத்தில் மொத்தமாக எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து தற்போது அதிகாரப்பூர்வமாகக் கூற முடியாது என்று தெரிவித்தார்.