Alaioli
தி. கிரிஷன்
உலகம் முழுவதும் தந்தையர்களின் பெருமையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி தந்தையர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு, கூலிம் தமிழ்ப்பள்ளியில் கடந்த ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமையன்று பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆண் ஆசிரியர்களுக்கும் பள்ளியில் வேலை புரியும் ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் தின விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியினை இவ்வார சபைக்கூடல் பொறுப்பாசிரியர் திருமதி யோகேஸ்வரி கோவிந்தசாமி அவர்கள் , மிகச் சீராக வழிநடத்தினார்.
தந்தையர்களின் முக்கியத்துவம், அவர்கள் வாழ்க்கையில் வகிக்கும் நிலைப்பாடு குறித்து மாணவர்களுக்குச் சபைக்கூடலில் பல்லூடகக் காட்சியாக ஒளிபரப்பப்பட்டது.
மேலும், மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் சிலர், தந்தையர் தின விழாவையொட்டி தங்களின் கருத்துகளைக் கவிதையாக ஒப்புவித்தனர்.
பள்ளியின் ஆண் ஆசிரியர்களுடன் மாணவர்களும் இணைந்து அணிச்சல் வெட்டும் சிறப்புமிக்க நிகழ்ச்சியினைக் கண்டு மகிழ்ந்தனர்.
மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக இவ்விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மாணவர்கள் தந்தையர் புகட்டும் நல்வழியில் பின்பற்றி நடந்தால் வாழ்க்கைச் சிறப்படையும் என்று
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ஜூலியானா பெரியநாயகம்
தமதுரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தந்தையின் பங்கையும் பெருமையையும் உணர்த்திய சிறந்ததொரு விழாவாக அமைந்தது.
சிலாங்கூர்
இறைச்சி வெட்டும் கத்தியால் போலீஸ் அதிகாரியைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆடவருக்கு ரிம.9,100 அபராதம்
கோலாலம்பூர்
Mi segera kini berperisa nasi lemak
ஜொகூர்
Gangguan bekalan air berjadual di daerah Johor Bahru, Kota Tinggi dan Pontian
கோலாலம்பூர்
Piala Thomas 2026: Malaysia 'kuda hitam' di Denmark, kata Zii Jia
கால்பந்து
Piala Dunia 2026: FIFA desak Donald Trump tangguh operasi ICE, bimbang cetus kekacauan
கோலாலம்பூர்
Himpunan GARAH: Anwar, kerajaan dan lima lain diarah fail pembelaan sebelum 21 Mei depan
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வாழும் சீக்கிய பெருமக்களுக்கு வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துகள்
புத்ராஜெயா
Sindiket pemalsuan dokumen pekerja asing lumpuh, dalang utama warga Nepal turut dicekup Imigresen