Anugerah Perdana Belia Negara எனப்படும் தேசியப் பிரதான இளைஞர் விருதினை பிரதமர் கையால் பெற்றது மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம்.
42 மலேசிய இளைஞர் மன்றங்களில் சிறந்த மன்றமாக மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் முதல் நிலையில் வாகை சூடியது.
1991 ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் இந்நாட்டு இளைஞர்களுக்காக என்னிலடங்கா நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் சிறப்பாகச் செய்தி பல இளைஞர்களின் வாழ்விற்கு விளக்கேற்றியுள்ளது. மத வேற்றுமைகளை கடந்து மலேசியாவில் வாழும் இந்திய இளைஞர்களின் மேம்பாட்டிற்கும் உழைக்கும் மன்றமாக மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் திகழ்கின்றது.
அரசாங்கம் மற்றும் அரசாங்க அமைப்புகளோடு இணைந்து மலேசிய வாழ் இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் களம் கண்டதாகும். கரணியம் மலேசிய இந்திய இளைஞர்களின் சமூகவியல் மேம்பாடுதான் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் முதன்மை கொள்கையாகும்.
மலேசியா முழுவதும் 123 கிளைகளுடன் 12 மாநிலங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் நாட்டின் இளைய சமுதாயத்தை சீர்படுத்தவும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் அமைச்சர் வாயிலாக அமுல்படுத்தவிருக்கும் வயது கட்டுப்பாடு சட்டத்தை எதிர்கொள்ளவும் முக்கிய முயற்சியில் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் வெற்றி கண்டு வருகிறது.
அகடெமிக் கெனெகாரான் மலேசியாவோடு நாடு தழுவிய நிலையில் 10 மாநிலங்களில் 700 பதின்ம வயது இளைஞர்களை நாளைய தலைவர்களாக உறுமாற்றும் முகாமினை வழிநடத்தி வருகிறது.
இப்படிப்பட்ட இணையற்ற செயலின் பலனே இந்த தேசிய இளைஞர் பிரதான விருதாகும். மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் கையால் கிடைக்கபெற்றது மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் வரலாற்றில் பதிக்கும் செய்தியாக மாறியுள்ளது. இதற்காக உழைத்த மலேசிய இந்தியர் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேசியத் தலைவர் திரு. தனேஸ் பெசில் அவர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.