பினாங்கு மாநிலத்தின் பிறை நதிக்கரையில் அமைந்துள்ள புனிதமான ஶ்ரீ கங்காதரன் சிவன் ஆலயத்தின் மிக விமர்சையாகவும் ஆன்மிகத் தீவிரத்துடனும் இராஜகோபுர அடிகல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த வரலாற்றுப் பெருவிழாவிற்கு தலைமை வகித்த தருமை ஆதின சுவாமிகள், சிறப்பு வருகையளித்து, ஆசிகள் வழங்கி, இராஜகோபுர அடிகல் நாட்டும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இது மலேசியாவில் மிகப் பெரிய சிவ ஆலயமாக கருதப்படுகிறது.
அவர் தனது உரையில், “ஆலயம் கட்டுவது சாதாரண விஷயம் அல்ல; அந்த ஆலயத்திற்குரிய தத்துவம், வடிவமைப்பு, தர்மமே அதன் பலனை நிர்ணயிக்கின்றன. பினாங்கில் கருங்கல்லினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த ஆலயம், உலக வரலாற்றில் இடம் பெறும் வகையில் உருவாகும்” என தருமை ஆதினம் சுவாமிகள் பாராட்டைத் தெரிவித்தார்.
திருப்பணி குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ தனேந்திரன் தனது உரையில்,“இந்த ஆலயம், தமிழக மாமன்னன் இராஜ ராஜா சோழன் எழுப்பிய கருங்கல் கோயில்களைப் போன்று, முழுவதும் கருங்கல்லினால் கட்டப்படவுள்ளது. இது இந்து பாரம்பரிய கட்டிடக்கலைக்கு ஒரு புதிய அடையாளமாகும்” எனவும் 9 அடுக்கு இராஜகோபுரம் மற்றும் 5 அடுக்கு கோபுரம் இந்த ஶ்ரீ கங் காதரன் சிவபெருமான் ஆலயத்தில் கொண்டிருக்கும் என தெரிவித்தார்.
விழாவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் வேத மற்றும் சமய விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதி, தேவரப் பாடல்களும் நாதஸ்வர இசையில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இது மக்கள் மனங்களில் ஆன்மிக உணர்வை ஏற்படுத்தியது.
விழாவின் சிறப்பு நிகழ்வாக, திருவாசகம் புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. திருவாசகம் நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கூடிய நூலாகும் ஆகவே இந்நூலை பக்தர்கள் பெற்றுச் செல்லாம் என திருப்பணி குழுவின் தலைவரான டத்தோ ஶ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.
மூன்று ஆண்டு கால கட்டத்தில் இந்த ஶ்ரீ கங்காதரன் சிவபெருமான் ஆலயம் எழுப்ப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.திருவாசக முதல் நூலை டத்தோ அம்பிகா பாகன் பெற்றுகொண்டதுடன்,தெ லெயிட் தங்கும் விடுதியின் நிர்வாக இயக்குநர் டான் ஶ்ரீ ராமேஷ் குடும்பத்தினருடன் கலந்துக்கொண்டதுடன் உடன் பினாங்கு மாநில இந்திய வணிகர் தொழிலியல் சங்கத்தின் தலைவர் டத்தோ எஸ். பார்த்ததிபன்,மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீ காசி தங்க கணேசன், மற்றும் பக்த பெருமக்கள் தருமை ஆதின சுவாமிகளிடமிருந்து ஆசி பெற்றுக் கொண்டனர்.
இந்த ஆன்மிக நிகழ்வை, சமூகத்தில் பரப்புவதற்காக அலை ஒளி ஊடகம் தனது பங்காக இந்த செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.