Alaioli
கத்தோயோங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு எந்த ஆபத்தும் இல்லை - சிவநேசன் நினைவுறுத்து!!

தஞ்சோங் மாலிம்,ஜூன்29: மேம்பாடுகளால் பாதிக்கப்படலாம் என பரவலாகப் பேசப்பட்டு வரும் கத்தோயோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஒருபோதும் ஆபத்தை எதிர்நோக்காது என்று மாநில ஆட்சிகுழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் நினைவுறுத்தினார்.


கத்தோயோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியுன் அதன் அருகிலுள்ள ஆலயமும் தொடர்ந்து அதே இடத்தில் நிலைநிறுத்தப்படும்.


இத்தோட்டம் மேம்பாடுகளால் பெரும் வளர்ச்சியை நோக்கி  வருங்காலத்தில் முன்னேறினாலும் தமிழ்ப்பள்ளிக்கும் ஆலயத்திற்கு துளியளவு ஆபத்தும் வராது என்றும் உறுதி அளித்த சிவநேசன் அதற்கான நடவடிக்கையை தாம் நிச்சயம் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்வேன் என்றும் கூறினார்.


பேரா மாநிலத்தைப் பொருத்தமட்டில் நான் இருக்கும் வரை தமிழ்ப்பள்ளி மற்றும் ஆலயங்களின் நலன் காக்கப்படும்.என்னை மீறி யாராலுந் எதுவும் செய்திட முடியாது என்றும் குறிப்பிட்டார்.


கத்தோயோங் தோட்டத்தை கார் நிறுவனம் ஒன்று பெரும் மேம்பாட்டுத் திட்டத்திற்காக கையப்படுத்தியிருப்பதாகவும் அதனால்,இப்பள்ளியும் ஆலயமும் பாதிப்பை எதிர்நோக்கலாம் என பொது மக்கள் மத்தியில் எழுந்த ஐயத்திற்கு சிவநேசனின் உத்தரவாதம் தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


வருங்காலத்தில் இப்பள்ளியும்  ஆலயமும் மேம்பாடுகளால் வளர்ச்சி சூழ்ந்த ஒரு பகுதியின் மையத்தில் நமது பெரும் அடையமாய் உயர்ந்து நிற்கும் என்றும் சிவநேசன் குறிப்பிட்டார்.


பள்ளி நிர்வாகம்,பெற்றோர் ஆசிரியர் சங்கம்,வாரியக்குழு உட்பட ஆலயத்தின் நிர்வாகமும் பெரும் அச்சத்தில் இருந்து வந்த நிலையில் எல்லாவற்றுக்கும் தீர்வாக சிவநேசனின் இந்த அறிவிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கத்தோயோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற திருமுறை ஓதும் போட்டியைத் தொடக்கி வைத்து பேசுகையில் சிவநேசன் இதனை கூறினார்.


மாண்புமிகு சிவநேசனின் இந்த அறிவிப்பால் நிம்மதி பெருமூச்சு விடுவதாக பள்ளி நிர்வாகவும் ஆலய நிர்வாகமும் சிவநேசனுக்கு  நன்றி கூறி தெரிவித்தனர்.

Leave a Comment
Trending News