Alaioli
பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு சிவாலெனின் தலைவரானார்!!

ஈப்போ,ஜூன்25: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு நாடறிந்த எழுத்தாளர் சிவாலெனின் தலைவராகப் போட்டியின்றி தேர்வானார்.


அச்சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்திருந்த சிவாலெனின் அதன் 50வது ஆண்டுப் போதுக்கூட்டத்திற்கு பின்னர் 2025 -2027ஆம் ஆண்டுக்கானத் தலைவராகப் பொறுப்பேற்றார்.


அதேவேளையில்,அச்சங்கத்தின் செய்லாளராக கவிஞர் மகேந்திரன் நவமணி,து.செயலாளராக இராதை சுப்பையா மற்றும் பொருளாளராக திரு.ஆறுமுகம் ஆகியோரும் போட்டியின்றி தேர்வானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்,சங்கத்தின் துணைத்தலைவர் போட்டிக்கு நடப்பு செயலாளர் முன்னாள் தலைமையாசிரியர் ச.முனியாண்டியும் நடப்பு பொருளாளர் ஆசிரியர் சபா கணேசும் போட்டியுட்ட வேளையில் முனியாண்டி வெற்றி பெற்று துணைத்தலௌவராகத் தேர்வானார்.


முன்னதாக நடைபெற்ற செயலவை உறுப்பினர் பொறுப்பிற்கு 

திரு.சுப.கதிரவன்,கவிஞர்

லெ.நாராயணன்,திரு.நா.வீரப்பன்,எழுத்தாளர் சு.ஹேமாவதி,திருமதி.அ.இளவரசி,கி.மணிமாறன், ச.லிங்கேஸ்சரன்,க.குழந்தைமேரி,ம.சந்தனதாஸ் மற்றும்

சித.பழனியம்மாள் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


புதிய நிர்வாகத் தேர்விற்கு பின்னர் ஏற்புரை வழங்கிய சிவாலெனின் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவது,இளம் எழுத்தாளர்களை உருவாக்குவது,கோமு புதுக்கவிதைப் போட்டிக்கான பரிசளிப்பை திறன்பட மேற்கொள்வது உட்பட சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடு செய்வது உட்பட பல்வேறு செயல்திட்டங்களை முன் வைத்தார்.


மேலும்,பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஈப்போவில் மட்டுமே மையம் கொள்ளாமல் இம்மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதன் செயல்பாடும் நடவடிக்கையும் விரிவடையும் என்றார்.


நடைபெற்ற 50வது பொதுக்கூட்டத்தில் நாட்டின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவரான பன்முகப் படைப்பாளர் எழுத்தாளர் கவிக்கூத்தன் இராமகிருஸ்ணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்,இளம் எழுத்தாளர்களுக்கானத் தமிழ்க்குயிலர் விருது எழுத்தாளர் இளமாறன் நாகலிங்கம் மற்றும் தமிழ்ச்சீலர் விருது இரமணாதேவிக்கும் இவ்வாண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment
Trending News