Alaioli
நமக்கு தேவை மேடையில் உரத்த குரல் அல்ல – தீர்வுகளைத் தரும் அமைதியான செயல்!!

 இந்தியச் சமுதாயம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்ப்பதில் அமைதியான முறையில் விவேகமாய் கையாள்வதில் தாம் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதாக கூறிய கெஅடிலான் கட்சியின் தேசியத் துணைத்தலைவர் நூரூல் இசாவின் அணுகுமுறையை தாம் வரவேற்ப்பதாக சுங்கை சிப்புட் தொகுதி கெஅடிலான் தலைவர் கி.நோவிந்தன் தெரிவித்தார்.


நூருல் இசாவின் இந்த அணுமுறையானது நீண்டக்கால தீர்வை உறுதி செய்வதற்காக பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய நுணுக்கமான திட்டமிடலை உள்ளடக்கியதாகும்.அவரது இந்த அணுகுமுறை அவர் அமைதியாக இருப்பதாக பொருள்படாது.மாறாக,விவேகமான திட்டமிடலின் யுக்தியென்பதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.


மேலும்,\"இன்று நமக்குத் தேவை மேடையில் உரத்த குரல் அல்ல, மாறாக உண்மையான தீர்வுகளைத்  தரும் அமைதியான செயல்\" சுங்கை சிப்புட் போன்ற பகுதிகளில் உள்ள இந்திய சமூகம் நீண்ட காலமாக கல்வியில் இடைநிற்றல் முதல் பொருளாதார நெருக்கடி வரை தொடர்ச்சியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வறுமையை கடத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


சுங்கை சிப்புட் உட்பட பல இடங்களில் இன்னமும் இந்தியச் சமுதாயத்தின் பொருளாதார நிலையில் பின் தங்கிய நிலையில்தான் உள்ளது.பெருந்து கட்டணம் செலுத்தமுடியாமல் பள்ளிக்குச் செல்லாத மாணவர்கள்,காலை உணவு இல்லாமல் சோர்ந்து போகும் மாணவர்கள்,கட்டணம் செலுத்தமுடியாத மழலையர் பள்ளி குழந்தைகள்,பொருளாதார சிக்கலால் தவிக்கும் தனித்து வாழும் தாய்மார்கள்,வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் என இன்னமும் இந்த அவலநிலை தொடர்வது வருத்தம் அளித்தாலும்,அவற்றுக்கான தீர்வை ஒரே நாளில் எதிர்பார்ப்பதும் சாத்தியமற்றது என தனது நேரடி அனுபவத்தையும் அவர் பகிர்ந்தார்.


இளைஞர்களைப் பொறுத்தவரை, பலர் இன்னும் குறைந்த ஊதியத்தில் தொழிற்சாலை மற்றும் தோட்ட  வேலைகளில் சிக்கித் தவிப்பதாகவும், திறன் மேம்பாட்டிற்கு இடமில்லாமல் இருப்பதாகவும், எனவே நீண்டகாலக் கொள்கைகளை வகுப்பதில் அதிக கவனம் செலுத்திய நூருல் இசாவின் அணுகுமுறையை அவர் முழுமையாக ஆதரிப்பதாகவும் கூறினார்.

\"இந்திய சமூகம் அரசியல் வாக்குறுதிகளால் சோர்வடைந்துள்ளது. நமக்குத் தேவை செயல், கருத்து அல்ல. அதற்காகத்தான் நூருல் இசா செயல்பட்டு வருகிறார், வெறும் அறிக்கைகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், ஒரு உறுதியான செயல் திட்டத்தையும் உருவாக்குகிறார்.\" என்றும் நூரூல் இசாவின் செயல்பாட்டை அவர் வரவேற்றார்.


இந்தியச் சமுதாயத்தின் தேவைகளை முன்னெடுப்பதில் நூரூல் இசா அரசியல் விளம்பரம் தேடாமல்;அமைதியான முறையில் நீண்டக்கால தீர்வை முன்னெடுப்பதில் செயல்திட்டங்களை ஆராய்ந்தும் செயல்படுத்தியும் வருகிறார் என்பதை விவரித்த நோவிந்தன் நமக்கு ஆர்ப்பாட்டமாய் கூச்சலிடும் தலைவர்கள் மத்தியில் நூரூல் இசா போல் அமைதியாய் விவேகமாய் செயல்படும் மக்கள் தலைவர்களே இன்றையத் தேவையாக இருக்கிறார்கள்.நூரூல் இசாவின் இந்த நகர்வும் முற்போக்கான செயல்பாடும் நிச்சயம் இந்தியச் சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு கட்டகட்டமாய் நன் தீர்வை ஏற்படுத்தும் என்னும் நம்பிக்கை இந்தியச் சமுதாயத்தின் மத்தியில் நிச்சயம் எழும் எனவும் அவர் தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.

Leave a Comment
Trending News