Alaioli
சுங்கை பட்டாணியில் மாபெரும் நடனத் திருவிழா தெறிக்க விடலாமா?

நாளை மாலை சுங்கை பட்டாணியில், ஜூலை 19, 2025 சனிக்கிழமை

MJ தேவா தயாரிப்பில், சுங்கை பட்டாணி விலேஜ் மால் வளாகத்தில் நடைபெறும் மிகப்பெரிய தனிநபர் நடனப் போட்டி நிகழ்ச்சி — “தெறிக்க விடலாமா?” — திரை உலகின் ரசிகர்கள் மற்றும் பொது மக்களுக்கென தனிச்சிறப்புடன் நடைபெறவுள்ளது.


இந்த நடனத் திருவிழா காலை 11.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை முழு உற்சாகத்துடன் நடைபெற உள்ளது. நிகழ்வின் பிரதான அம்சமாக, தமிழ்த் திரைப்பட உலகின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரும், தனித்துவமான நடனகலை  கொண்டவருமான திரு ரோபோ சங்கர், நடுவர் பணியில் கலந்துகொள்கிறார். அவருடன் இணைந்து, முக்கிய நடன இயக்குனர் MJ மணி ஆகியவரும் போட்டியாளர்களின் ஆட்டத்திற்குத் தீர்ப்பு வழங்க உள்ளனர்.


சிறப்பு விருந்தினர்கள்:

இந்த நிகழ்வில் சிங்கப்பூர்  தொழிலதிபர் டாக்டர் சின்னையா மற்றும் டாக்டர் ஜொபினா நாயிடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவிற்கு கௌரவம் சேர்க்கின்றனர். மேலும் அவர்களோடு கெடா மாநில மஇகா தலைவர் மதிப்புமிகு சுரேஷ் மற்றும் பல முக்கிய அரசியல், சமூக, கலாசார பிரமுகர்களும் நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.


போட்டியின் சிறப்பம்சங்கள் -


இந்த தனி நபர் நடனப் போட்டி மூன்றாவது வருடமாக நடைபெறுவதால், திருத்தம் பெற்ற வடிவில் இன்னும் சிறப்பாக அரங்கேறுகிறது.

முன்னோட்டத் தேர்வில் தெரிவுசெய்யப்பட்ட சிறந்த 20 போட்டியாளர்கள், இறுதிச் சுற்றில் தங்களின் நடனத் திறமைகளை மைதானத்தில் மிகுந்த உற்சாகத்துடன் வெளிப்படுத்துவார்கள்.

வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு பண பரிசுகள், விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.


பொதுமக்கள், இரசிகர்கள், மாணவர்கள், கலையுலக ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்களோடு வர விரும்பும் அனைவரும் இந்த நடன விழாவிற்கு வருகை தந்து, இளைஞர்களின் திறமைகளை உற்சாகப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


MJ தேவா தயாரிப்பு, MJ மணி நடன இயக்கம் ஆகிய அமைப்புகளின் வழிநடத்தலில் நடைபெறும் இந்த நிகழ்வு, சுங்கை பட்டாணி வாழ்வின் கலாச்சார விழாக்களுக்குப் புதிய ஒளியைத் தரும் என்பது உறுதி.

நடனம் உங்கள் ஆடம்பரமல்ல… உங்கள் அடையாளம்!”

அதற்கான மேடையாக உருவாகும் “தெறிக்க விடலாமா?”யில் வாரீர், காணீர், மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்.

Leave a Comment
Trending News