Alaioli
சமூக மேம்பாடு எனது இலக்கு – சூராவ் அவாமியாவிற்கு வெ.73,500 மானியம்!!

பத்துகாஜா,நவ06: பல்லினம் வாழும் நாட்டில் சமூக மேம்பாடும் பல்லினத்தின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தான் தனது இலக்கு என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.,சிவகுமார் குறிப்பிட்டார்.இனம்,மொழி,மதம் கடந்து அனைத்து சமூகமும் ஆக்கப்பூர்வமான மேம்பாடும் வளர்ச்சியும் கொண்டிருக்க வேண்டும் என்பதே தனது கனவு எனவும் அவர் மேலும் கூறினார்.


அவ்வகையில்,ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கான தனித்துவ பண்பாடு,பாரம்பரியம்,சமய நம்பிக்கை,வழிபாடு முறையென எல்லாமே வேறுப்பட்டிருந்தாலும் அவர்களின் மேம்பாடும் வளர்ச்சியும் மக்கள் பிரதிநிதியாக செழிமையுற வழங்க வேண்டியது தன் கடமை எனவும் சிவகுமார் குறிப்பிட்டார்.


பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினராக பல்லினத்தின் வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டிற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் நிறைவான பங்களிப்பு செய்ய வேண்டியது தன் கடமை என நினைவுறுத்திய அவர் இத்தொகுதியின் ஆலயங்கள்,மசூதிகள்,சீன கோவில்கள்,சீக்கியர் வழிபாட்டு இடம் உட்பட பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட வழிப்பாட்டுத் தலங்களுக்குத் தொடர்ந்து மானியங்களோடு அதன் தேவைகளையும் நிறைவு செய்து வருவதாக கூறினார்.


சமூக மேம்பாட்டை இலக்காக கொண்டு சேவையாற்றும் சிவகுமார் துரோனோ கம்போங் செர்க்காய் ஜாடியிலுள்ள சூராவ் அவாமியாவிற்கு வெ.73,500ஐ மானியமாக வழங்கினார்.இம்மானியத்தின் வாயிலாக சம்மதப்பட்ட சூராவ்யின் கழிப்பறைகள் மேம்படுத்தப்படுவதோடு,வூடுட் மேற்கொள்வதற்கான இடம் அமைத்தல் உட்பட பல்வேறு மேம்பாடுகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.


அதேவேளையில்,சமய வழிப்பாட்டுத்தலங்கள் கடவுளை வணங்கும் இடமாக மட்டுமில்லாமல் மக்களை ஒன்றுப்படுத்தி சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் தலமாகவும் திகழ வேண்டும் என்பதே தனது நம்பிக்கை என்றும் கூறினார்.ஜசெகவின் பிரதிநிதியாக மடானி மக்கள் பிரதிநிதியாக இருந்து வரும் தாம் இனம்,மொழி,மதம் கடந்து அனைவருக்கும் சேவை செய்வதையே கடமையான உணர்ந்து சேவையாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


அதேவேளையில்,பத்து காஜா தொகுதியில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் மேம்பாடுகளும் மக்களின் தேவையறிந்து மேற்கொள்ளப்படுவதாகும்.கிராமத்து நிர்வாகச் செயலவை,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட மக்களின் கோரிக்கைகள் என அனைத்து நிலையிலும் நன்கு ஆராய்ந்து அதனை செயல்படுத்திவதில் தாம் தொடர்ந்து முனைப்பு காட்டுவதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.

Leave a Comment
Trending News