Alaioli
மங்கோலியாவில் ஒலித்த தமிழ் சிறுமியின் வெற்றி குரல் -  பினாங்கு சுவேத்தாவுக்கு அனைத்துலகப் பாராட்டு.

ஜார்ஜ்டவுன், நவ. 6 -மங்கோலியாவின் உலான் பாதரில் நடைபெற்ற 19வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய பாரதி தமிழ் பள்ளி மாணவி சுவேத்தா, தன் திறமையாலும் தன்னம்பிக்கையாலும் மலேசியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.


மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்ட இந்தப் பெரும் ஆசிய போட்டியில், மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு பேர் கொண்ட அணி மொத்த மதிப்பெண்களில் மூன்றாவது இடத்தை பெற்றது.


சுவேத்தா தனிநபர் பிரிவில் 33வது இடத்தை பெற்றதோடு, வேக (Rapid) மற்றும் மின்னல் (Blitz) பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்ற மலேசிய அணியின் அங்கமாக சிறப்பாகப் பங்கேற்றார்.


அவளின் உறுதியான ஆட்டத் திறமை மற்றும் தன்னம்பிக்கையைப் பாராட்டி, மங்கோலிய பிரதமர் கொம்பொஜவின் ஸண்டன்ஷடாரன் (Gombojavyn Zandanshataran) அவருக்கு தனிப்பட்ட வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


மேலும், ஆசிய சதுரங்க கூட்டமைப்பு (Asian Chess Federation) மற்றும் மங்கோலிய சதுரங்க கூட்டமைப்பு (Mongolian Chess Federation) ஆகியவை சுவேத்தாவின் திறமையை பாராட்டி சிறப்பு அங்கீகாரம் வழங்கின.


மலேசிய சதுரங்க பேரவையின் தலைமை அதிகாரி திரு. இஸ்வான், “சுவேத்தா தனது கடின உழைப்பாலும் திறமையாலும் பினாங்கு மாநிலத்திற்கும் தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார் எனக் கூறி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


பினாங்கு மாநில கல்வி வட்டாரங்கள், சுவேத்தாவின் இந்த சாதனை தமிழ் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஊக்கத்துக்கும் வழிகாட்டும் ஒரு பெருமைச் சின்னமாகும் எனக் குறிப்பிட்டுள்ளன.

Leave a Comment
Trending News