Alaioli
சமூக, விளையாட்டு மேம்பாட்டில் சிறப்புப் பங்கு – பாராட்டு மழை
சென்னை, நவம்பர் 28 – மலேசியாவின் முன்னாள் செனட்டரும், சமூக மற்றும் விளையாட்டு துறைகளில் நீண்டகாலமாக முக்கிய சேவையை வழங்கி வருபவருமான திரு டத்தோ டி.மோகன் , இன்று காலை சென்னை தியாகராயர் நகர் (டி.நகர்) பகுதியில் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை சி.ஏ. சத்யா, தென் சென்னை மாவட்ட செயலாளர் செல்வப்பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் டத்தோ மோகன் அவர்களுக்கு பாரம்பரிய மரியாதையாக பொன்னாடை போர்த்தி, மணி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கராத்தே சங்கத் தலைவர் ஹீகான் கராத்தே தியாகராஜன் அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
டத்தோ மோகன் அவர்கள் மலேசியா இந்திய காங்கிரஸ் மஇகா கட்சியின் உதவித் தலைவராகவும், மலேசிய பாராளுமன்ற மேலவை (Dewan Negara) உறுப்பினராகவும் இரு முறை பதவி வகித்தவர். மேலும், மலேசியா இந்திய கால்பந்தாட்ட கழகம் (MIBA) மூலம் இந்திய இளைஞர்களின் விளையாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
மலேசியாவிற்கு செல்லும் இந்திய சமூகத் தலைவர்களையும், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களையும் அன்புடன் வரவேற்று விருந்து போடுவதில், அந்நாட்டில் வாழும் இந்திய சமூகத்தின் பாரம்பரிய உறவுகளை பலப்படுத்துவதிலும் டத்தோ மோகன் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்து வருகிறார் என சந்திப்பில் தோழர் மல்லை சத்தியா விவரித்தார்.

மல்லை சி.ஏ. சத்யா “இந்தியா–மலேசியா உறவை மக்கள் மட்டத்தில் வலுப்படுத்தும் மனிதநேய பணிகளை டத்தோ மோகன் அவர்கள் தொடர்ந்து செய்து வருவது பாராட்டத்தக்கது. சமூக மற்றும் இளைஞர் மேம்பாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு இருநாடுகளுக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. மறுமலர்ச்சிப் பாதையில் முன்னேறுவோம் என்றார்.
சந்திப்பில் அமைந்த கலந்துரையாடலில், இருநாடுகளுக்கிடையேயான கலாச்சாரம், விளையாட்டு பரிமாற்றங்கள், இந்திய வம்சாவளி இளைஞர்களின் கல்வி–வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல விடயங்களும் பேச்சுவார்த்தைக்கு வந்தன.சந்திப்பு முடிவில், அனைத்து தலைவர்களும் டத்தோ மோகன் அவர்களின் சேவையை பாராட்டி, எதிர்கால சமூக மேம்பாட்டு முயற்சிகளுக்குத் தாம் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

பினாங்கு
அகதிகளுக்கான உலகளாவிய பாதுகாப்புக் காவலரின் மலேசியப் பிரதிநிதி பினாங்கு மேயருடன் சந்திப்பு!
ஜொகூர் பாரு
ஜொகூர் மாநில உள்ளூர் அதிகாரம் மன்ற உறுப்பினர்கள் மாநாடு 2025–ஐ டத்தோ’ ஜஃப்னி திறந்து வைத்தார்.
பினாங்கு
தலைநகரின் ஷா அலாம் நகரசபை ஊழியர்கள் பினாங்கு மாநகர் மன்றத்திற்கு நல்லெண்ண வருகை!
சிலம்பம்
Penang Silambam Team Set to Compete at BMAEX Tournament 2025 in Labuan
கூலிம்
கான்கிரீட் கலவை லாரியுடன் மோதியதில் கூலிமில் 17 வயது மாணவர் உயிரிழப்பு
கால்பந்து
பிரிமியர் லீக்: அர்செனல் இரு கோல் வித்தியாசத்தில் எதிரியை வீழ்த்தியது
சபா
Sabah Mourns the Passing of Bung Moktar Radin