Alaioli
 பினாங்கு பள்ளிகளுக்கு எதிகா தகாஃபுல் சார்பில் 85 ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்பட்டது

செபராங் ஜெயா நவ 2 – எதிகா தகாஃபுல் பெர்ஹாட், பினாங்கு மாநில இஸ்லாமிய மத கவுன்சில் (Zakat MAINPP) வகலா ஸகாத் திட்டத்தின் மூலம், மொத்தம் RM748,000 மதிப்பிலான 85 ஸ்மார்ட் போர்டுகளை 73 தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது.

துணை முதல்வர் I, டத்தோ’ டாக்டர் முகமது அப்துல் ஹமீத் தெரிவித்ததாவது, இந்த மொத்த தொகையில் RM607,200 புலாவ் பினாங்கு மாநில கல்வித் துறைக்கு வழங்கப்பட்டு, 60 SK (Sekolah Kebangsaan), SMK (Sekolah Menengah Kebangsaan) மற்றும் SABK (Sekolah Agama Bantuan Kerajaan) பள்ளிகளை உள்ளடக்குகிறது.

“அதே நேரத்தில், RM140,800 ஜஹேஅயிப்ப் (JHEAIPP) கீழ் உள்ள 13 KAFA (Kelas Al-Quran dan Fardhu Ain) பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது,” என்று அவர் இன்று மதியம் பெர்மாத்தாங் பாவுக்கு அருகிலுள்ள PERDA Space & Sport Arena மண்டபத்தில் நடைபெற்ற Smart Board Wakalah Zakat Etiqa Takaful வழங்கும் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மேலும், இந்த வழங்கல் நடவடிக்கை, பினாங்கை புத்திசாலித்தனமான மற்றும் பசுமையான மாநிலமாக உருவாக்கும் தேசிய மற்றும் மாநில நோக்கத்துடன் இணங்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

“இனி எங்கள் இலக்கு, ஸ்மார்ட் போர்டுகள் இன்னும் இல்லாத மீதமுள்ள தேசிய பள்ளிகளையும் முழுமையாகச் சீரமைத்தல்.

“இதுபோன்ற உயர்ந்த தாக்கம் கொண்ட திட்டங்கள் மூலம் புலாவ் பினாங்கு மாநில முஸ்லிம் மாணவர்கள் டிஜிட்டல் முறையில் தரமான கல்வி பெற முடியும்; இது மலேசிய கல்வி அமைச்சகம் வலியுறுத்தும் இலக்காகும்,” என்று இஸ்லாமிய மேம்பாடு, கல்வி, உயர்கல்வி மற்றும் சமூக ஒற்றுமை ஆட்ச்சிக்குழு உறுப்பினராகவும் இருக்கும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, மாநில அரசு MAINPP மூலம் பல்வேறு முன்முயற்சிகளின் அடிப்படையில் டிஜிட்டல் கல்வி அணுகலை வலுப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“இதில் 263 பள்ளிகளுக்கு 8,740 டேப்லெட்டுகளை வழங்கிய RM6.51 மில்லியன் மதிப்பிலான திட்டமும் அடங்கும்.

“அதேபோல், RM500,000 மதிப்பில் 2,500 மாணவர்களுக்கு பயனளித்த கண் கண்ணாடி உதவி திட்டமும், RM382,231.25 மதிப்பிலான பயிற்சி புத்தகங்கள் மற்றும் SPM பயிற்சி வினாத்தாள் தொகுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

“இவை அனைத்தும் எதிகா தகாஃபுல் வகலா ஸகாத் நிதி மற்றும் யாயசான் ஸஹாபத் பினா நெகாராவின் (YSBN) ஒத்துழைப்பின் பலனாகும்.

“இது ஸகாத் கருவி  உதவித்தொகைகளில் மட்டுமே இல்லை, மாறாக கல்வித் திறனை மேம்படுத்துவதிலும், எதிர்கால சமூக–பொருளாதார முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிப்பதை நிரூபிக்கிறது,” என்றார்.

Leave a Comment
Trending News