Alaioli
பினாங்கில் 10 ஆயிரம் தன்னார்வலர்கள் கூடும் ஏஇடி பயிற்சி!               கின்னஸ் உலக சாதனையாக பதிவாகும் பெருமை!

பினாங்கு டிசம்பர் 2 பினாங்கில் AED எனப்படும் இதயத் துடிப்பை மீட்கும் தானியங்கி இயந்திர இயக்கப் பயிற்சியில் ஈடுபடும் பொருட்டு ஒரே நேரத்தில் 10 ஆயிரம் தன்னார்வலர்கள் ஒன்றிணையும் மாபெரும் நிகழ்ச்சி, எதிர்வரும் டிசம்பர் திங்கள் 7ஆம் நாள், இங்கிருக்கும் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்திலுள்ள, துவாங்கு செயிட் புத்ரா அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.


     
பினாங்கு இதயப் பாதுகாப்பு சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடத்தப்படவிருக்கும் இந்த உன்னத நிகழ்ச்சிக்கு மாநில அரசு முதற்கண் நல்லாதரவு வழங்கியிருக்கும் நிலையில், இங்கிருக்கும் ஏனைய அரசு சாரா அமைப்புகள் பலவும் தத்தம் ஆதரவுகளை இந்நோக்கத்திற்காக வழங்கிட உடன்பாடு கண்டிருப்பதாக, சம்பந்தப்பட்ட சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் லுவா லியன் வாதெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில், அண்மையில் இங்கிருக்கும் கொம்தார் கட்டடத்திலுள்ள மாநாட்டு அறையில் நடத்தப்பட்ட செய்தியாளர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் விளக்கமளித்த அவர், இதயத் துடிப்பை மீட்கும் உயிர்காப்பு பயிற்சிகளில் அநேக தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது தங்களின் லட்சியம் என்றும், இதனை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் தங்களுக்கு தற்போது சாதகமாகியிருப்பதாகவும்மனநிறைவு தெரிவித்தார்.

     
இக்கூட்டத்திற்கு சிறப்பு வருகையளித்திருந்த மாநில இளைஞர் விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர்டேனியல் கூய், இந்த மாபெரும் பயிற்சியை முன்னின்று நடத்தும்  பினாங்கு இதயப் பாதுகாப்பு சங்கத்தினருடன், செயிண்ட் ஜோன்முதலுதவி ஊர்தி  அமைப்பினர், பினாங்கு செஞ்சிலுவை சங்க அமைப்பினர் மற்றும் மாநில சுகாதாரத் துறையினர் ஆகியப் பல அமைப்புகளின் ஒத்துழைப்பு இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு வலு சேர்ப்பது உறுதியென்று வாழ்த்துரைத்தார்.

     
ஒருவரின் இதயத் துடிப்பை மீட்டு, அந்நபரை புனர் நிலைக்கு கொணரும் சேவை, புனிதமானதும் உயர்வானதும் ஆகுமென்று புகழுரைத்த டேனியல், இச்சேவையை மாநில ரீதியாக விரிவுப்  படுத்தி, பலருக்கும் உதவும் வகையில் பயனடையச் செய்வதே  மாநில அரசின் நோக்கமென்பதற்கு ஏதுவாக, இந்த மாபெரும்  பயிற்சி, வரலாற்றுப்பூர்வ நிகழ்வாக உலகளாவிய நிலையிலும் மலேசிய சாதனைப் புத்தகத்திலும் பதிவாகவிருப்பது, பினாங்கு மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பது திண்ணமென்றும் விவரித்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News