Alaioli
உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?   சிவநேசன் காட்டம்

டிகே மூர்த்தி 

ஈப்போ 08.12.2025  சபா தேர்தலில் ஜசெக தோல்வி பொதுத் தேர்தலில் நடந்தது போன்று ம.இ.கா சார்பில் நெகிரியில் ஒருவர் துள்ளிக் குதித்துள்ளார். 15வது தேர்தலில் இவர்களுக்கு இந்திய சமூதாயமே கொடுத்த தோல்வி என்னும் மரண அடியை திசைத்திருப்பும் வகையில் "ஜசெக ஆக்ரோஷக் குரல் மக்களுக்கானது அல்ல" என்று கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் கூறினார்.


1999 இல் நூறு சதவீதம் வெற்றி அடைந்தவர்கள் கடந்த தேர்தலில் இவர்கள் வென்றது  ஒரே இடம். சபா தேர்தலை பொடி வைத்து சுட்டியுள்ளனர். இவர்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?  என்றும் சிவநேசன் கேள்வி கேட்டுள்ளார். என் கேள்விக்கு முறையான பதில் வராது என்றும் அவர் குறிப்பிட்டார். 


ஜசெக ‌குலசேகரன்,  துளசி மனோகரன், சிவநேசன் இந்த மூன்று அரசியல்வாதிகளுக்கு ம.இ.காவை சீண்டினாள் தான் அரசியலில் பிழைப்பு நடத்துகின்றனர் என்ற குற்றச் சாட்டை வண்மையாகவும் கண்டித்துள்ளார்.இஇவர்கள் ஜசெக குறித்து எதுவும் பேசலாம், நாங்கள் ம.இ.காவைக் குறித்து குற்றம் சாட்டினால் அடங்கிப் போவதில்லை. இவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா? என சிவநேசன் விவரித்தார். 


பேசுவதற்கு முன் என்ன பேசவேண்டும்? மக்களுக்காக எதைப் பேசவேண்டும்? என்ற அனுபவம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. கடந்த 1999 தேர்தலில் ஜசெகவை சேர்ந்த கர்ப்பால் சிங், லிம் கிட் சியாங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் தோல்வியைத் தழுவினர்.


நூறு சதவீதம் வெற்றிப் பெற்ற நீங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் ஏயிம்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வெண்டோ அக்கடமியை காட்டுகின்றனர். இந்த இரண்டும் தோற்றுவிக்க மக்கள் பணம், அரசாங்கப் பணம், மேலும், அரசாங்கம் நிலமும் கொடுத்துள்ளது.  அந்நிலையில், இன்று பேரா இந்திரா முலியாவில் நடந்த மாதாந்திர மக்கள் சந்திப்புக்கூட்டத்தில் இந்திய சமூகத்தின் நலப்பிரிவு சார்பில் சித்தியவான் கம்போங் டிராலிக் அரசாங்க நிலத்தில் குடியிருக்கும் 80 இந்தியக் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுமனை  உரிமம் அடுத்த ஆண்டில் கிடைக்கும் என்ற உறுதிமொழி வழங்கினார். 


ஊத்தான் மெலிந்தாங் சட்ட மன்றத்தில் நான்கு தவணையாக என் அருமை நண்பர் காலம் சென்ற டான்ஶ்ரீ கோ.ராஜூ இருந்துள்ளார். ஆனால் 50 ஆண்டு கால சுங்கை தீமா இந்திய சமூகத்தின் வீட்டுமனை உரிமம் கிடைக்காமல் 46 குடும்பங்கள் எதிர்நோக்கி வந்தனர்.


இந்த ஆண்டு தீபாவளிக்கு சுங்கை தீமா இந்திய சமூகத்தின் நிலப் பிரச்சினை தீர்க்கப்பட்டு பட்டாவும் நான் வழங்கியுள்ளேன். இது போன்று சுங்காய், தைப்பிங், தாப்பா வட்டாரத்திலும் அரசாங்க நிலத்தில் வாழும் இந்தியர்களுக்கு தீர்வு பிறப்பதற்கு மாநில ஆட்சிக்குழு மூலம் முக்கிய பங்கு வகித்துள்ளேன்.


இந்த ஆண்டு இதுவரை பேரா மாநில இந்திய சமூகத்திற்கு மாநிலம்-மத்திய அரசு சார்பில் மொத்தம் 7.3.மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது. ம.இ.கா.காலத்தில் பேராவில் இந்த அளவுக்கு மானியம் வழங்கப்படவில்லை என்றும் சிவநேசன் இடித்துரைத்தார்.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News