Alaioli
ஜொகூர் முழுவதும் ‘BANTUAN KASIH JOHOR’ வழங்கல் தீவிரம் — மாசாபில் மகிழ்ச்சியுடன் உதவிகளை வழங்கிய மந்திரி  பெசார் ஒன் ஹஃபிஸ் காஸி

கோகி கருணாநிதி

ஜொகூர், டிச. 8 —

ஜொகூர் மந்திரி பெசார் மற்றும் மாசாப் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி, தாம் மாசாப் மற்றும் சிம்பாங் ரேங்காம் பகுதிகளுக்கு ஒவ்வொரு முறை வந்தாலும் அந்த பகுதியின் மக்களிடமிருந்து கிடைக்கும் அன்பு அதீத மகிழ்ச்சியைத் தருகிறது என தெரிவித்தார். ‘பான்துவான் காசிஹ் ஜொகூர்’ (BKJ) 2025 உதவிகளை இந்த முறை மாசாப் மக்களுக்கே நேரில் வழங்கும் வாய்ப்பைப் பெற்றிருந்ததால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பானது என்றார். 

 

ஜொகூர் பட்ஜெட் 2026 இல் மாநில அரசு அறிவித்த 23 ‘பான்துவான் காசிஹ் ஜொகூர்’ முயற்சிகள் மொத்தம் ரி.ம170.7 மில்லியன் ஒதுக்கீட்டுடன் 355,000க்கும் மேற்பட்ட ஜொகூர் மக்களை நலனடையச் செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. BKJ உதவிகள் தற்போது மாசாபில் மட்டுமல்ல, ஜொகூர் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், அந்தந்த இடங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மூலம் விரைவாகவும் ஒழுங்குமுறையுடனும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை குறிப்பிட்டார்.


மாசாபில் நடைபெற்ற சமீபத்திய BKJ வழங்கல் நிகழ்வில் மட்டும் 5,376 பெறுநர்கள் பல்வேறு பிரிவுகளில் உதவிகளைப் பெற்றனர். முன்னாள் இராணுவ வீரர்கள், மூன்னால் காவல்துறையினர்கள்,  கூட்டாட்சி அரசு பணியாளர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், நிலவளா மீனவர்கள், சேவைத் துறையில் உள்ள பணி செய்பவர்கள், ஒராங் அஸ்லி சமுதாய உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பொருளாதார இயக்குநர்கள் இதில் இடம்பெற்றனர். மேலும், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், நீண்டநாள் நோயாளிகள், அனாதை குழந்தைகள், குறைந்த வருமானக் குடும்பங்கள் போன்ற சமூக நலத்திட்டக் குழுக்களும் நேரடி நன்மையைப் பெற்றனர்.


உதவி வழங்கும் நிகழ்வில் மந்திரி பெசார் மக்கள் உடன் நெருக்கமாக உரையாடியும் நிலைமைகளைப் பகிர்ந்து கொள்ளவும் நேரம் ஒதுக்கியார். மாநில வளர்ச்சியின் பலன்கள் ஜொகூர் மக்களின் ஒவ்வொரு தரப்புக்கும் சமமாக சென்றடைய வேண்டும் என்பது தனது உறுதியான நோக்கம் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


மாநில அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை வலுப்படுத்தி, அதிக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவிகளை விரிவுபடுத்தி, மக்களின் நலனையே ஒவ்வொரு கொள்கையும் முடிவினும் முன்னுரிமையாகக் கொள்ளும் என அவர் தெரிவித்தார்.


மாசாப் மக்களின் அன்பான வரவேற்புக்கும் குடும்பத் தழுவலுக்கும் நன்றி தெரிவித்த மந்திரி பெசார், “இந்த முயற்சிகள் ஜொகூர் மக்களின் வாழ்வில் மேலும் நன்மை, செழிப்பு மற்றும் அமைதி வளரச் செய்வதாக நம்புகிறேன். இன்று மட்டுமல்ல, வருங்காலத்திலும் முழு ஜொகூர் மக்களுக்காக இந்த நன்மைகள் தொடரட்டும்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News