Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
பத்துமலை பிப்.2. சிலாங்கூர் மாநில அளவில் இதுகாறும் செயல்பட்டு வந்துள்ள 58 இந்து ஆலயங்கள் சட்டப் பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலங்களில் அந்த ஆலயங்கள் இடம் பெற்றுள்ளன என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தகவல் தெரிவித்தார்.
சட்ட விதிகளை மீறிய அல்லது பிறருக்குச் சொந்தமான நிலங்களில் அமைந்த சில ஆலயங்கள் இடிக்கப்பட்ட தாகவும் தகுதியான ஆலயங்கள் மட்டுமே நுட்ப ஆய்வுகளுக்குப் பின் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பத்துமலை முருகன் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாப்பா ராய்டு இதற்கு முன்பு மாநில அளவில் செயல்பட்டு வரும் 54 இந்து ஆலயங்களுக்கு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மானியங்களை அதன் நிர்வாகத்தினரிடம் எடுத்து வழங்கிய விவரங்களையும் அலை ஒளி செய்தியாளரிடம் அவர் தெரிவித்தார்.
ஆலயங்கள் பக்த மெய்யன்பர்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதோடு ஆலய நிர்வாகத்தினர் கண்காணிப்பில் ஆலயம் சொந்த நிலத்தில் எந்த ப் பிரச்சினை னகளும் இன்றி அமையப் பெறுமானால் அது அனைவருக்கும் சிலாக்கியம். எங்களுக்கும் அதனால் அதிகபட்ச மன உளைச்சல், அலைச்சல், தலைவலியாகும் பிரச்சினைகள் எப்போதும் உருவாகாது என்று பாப்பா ராய்டு அலை ஒளியிடம் தமது கருத்தைப் பதிவு செய்து கொண்டார்.
பினாங்கு
மகளிர் தினத்தையொட்டி பினாங்கில் மலர்கள் விநியோகித்து ஜ.செ.கவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்!
பந்திங்
பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் நோன்புப் பெருநாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை 650 பேர் பெற்றனர்.
கோலசிலாங்கூர்
கோல சிலாங்கூர் அங்காளபரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலய மாசி மகத் திருவிழாவில் 10 ஆயிரம் பேர் திரண்டனர்.
ஈப்போ
ஆலய விவகாரங்களில் மூன்றாம் தரப்பு தலையிடுவதை நிறுத்திகொள்ளவேண்டும் !அர்விந்த் அப்பளசாமி வலியுறுத்து!!
பினாங்கு
Perpaduan dan Keharmonian Teras Kekuatan: KRT Pantai Jerjak Raikan Tahun Baru Cina dengan Penuh Muhibah
பினாங்கு
RSN Rayer Gesa Polis Siasat Zamri Vinoth Berhubung Kes Langgar Lari di Bukit Mertajam
பினாங்கு
பள்ளி வயதிலேயே மாணவர்களுக்கு வர்த்தக அறிவை வளர்க்க வேண்டும் எண்ட்ரிகோ இயக்குநர் ராஜேந்திரன்
பினாங்கு
53 Pelajar Terima Bantuan Pendidikan LWHPP Fasa Pertama 2026