Alaioli
மக்களை அரவணைத்து பாதுகாப்புடன் வழி நடத்திட ஊழலற்ற ஆட்சியை அமைக்க பிரதமருக்கு 2 தவணைகள் போதும்; மகளிர் தலைவி உமாநந்தினி கருத்து.

எஸ்.எஸ்.மணிமாறன்.

பந்திங். மார்ச் 3.  நம்பிய வாக்காளர்களை அரவணைத்து பாதுகாப்புடன் வழி நடத்திட நாட்டில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த ஒரு பிரதமருக்கு 2 தவணைகள் போதும் என்று கோலலங்காட் மாவட்ட பிகேஆர் தொகுதி மகளிர் தலைவி உமாநந்தினி ஞானப்பிரகாசம் மனம் திறந்த தமது கருத்தை அலை ஒளி செய்தியாளரிடம் வெளியிட்டார்.


பிரதமர் பதவிக்கு 10 ஆண்டுகள் (இரண்டு தவணைகள்) போதும் என்ற கட்டுப்படுத்தும் அரசியல் சட்டம் மீதான திருத்த மசோதா நேற்று நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்த வேளையில்,   3..2 மடங்கு ஆதரவு இன்றி அது தோல்வி கண்டதாக பிரதமர் துறை சட்டத் துறை அமைச்சர் அஸாலினா ஒஸ்மான் தெரிவித்திருந்தார். முந்தைய பிரதமர்கள் ( பெயர் குறிப்பிட தேவையில்லை) நீண்ட காலமாக பிரதமர் பதவியில் வகித்த நேரத்தில் நாட்டில் பல கோணங்களில் ஊழல் தலை விரித்தாடியது. ஊழல் வழக்கில் சிக்கிய ஒரு பிரதமர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.


இப்படி, நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்து வந்ததால் நாட்டில் எல்லை கடந்த ஊழல் சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்து,  ஒன்று பிடிபட்டால் ஒன்று தலை தூக்கி பலருக்கும் அதனால் தலை வலியை அதிகரித்ததே தவிர அதற்கான தீர்வும் முற்றுப்புள்ளியும் வைக்கப் படாததால், மடானி அரசின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டு வந்துள்ள பிரதமருக்கான 2 தவணைகள் திட்டம் நேற்று நாடாளுமன்ற அவையில் தோல்வி கண்டது மிகவும் வருத்தத்திற்குரிய ஒரு சம்பவம் என்று உமா நந்தினி அலை ஒளியிடம் கூறினார். 


நீண்ட காலம் ஒருவர் பிரதமர் பதவி னயை வகித்து வந்ததால் நாட்டில் ஊழல் சம்பவங்கள் தொடர்கதையாகி வந்துள்ளது குறித்தும் கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினருமான உமா நந்தினி  தமது கருத்தை முன் வைத்துப் பேசினார். இது நடப்புக்கு வருமானால் இந்தச் சட்டத்தின் கீழ் முதல் பிரதமராக தாமே இருக்க முடியும் என்று பிரதமர் அன்வார் கருத்து வெளியிட்டிருந்தார்.

Leave a Comment
Trending News