Alaioli
\"ஊறும் கிணறுதான் இறைக்கின்றது\" எனும் பழமொழிக்கேற்ப, சமூகப்பணிகளிலும் தமிழ் வளர்ச்சியிலும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோருக்கு மரியாதை செலுத்தும் ஓர் உயரிய நிகழ்வு கடார மண்ணில் கவிமணியாய் நிகழ்ந்தது.

கடாரம் கண்ட தமிழ் மண்ணின் மடியில், தம்பி முருகையா அவர்தம் துணைவியார் உருவாக்கிய கலைதோணியில், அவரது பெற்றோர் ஒளியுற்ற பாதையில் நன்றி நெஞ்சோடு ஒரு சமர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில், செந்தமிழின் பெருமையை சுமந்து வந்த சிங்கப்பூரின் செல்வர் டாக்டர் சின்னையா மற்றும் அவரது துணைவியார், மகளிர் முன்னேற்றத் துறையில் ஆழ்ந்த பணி புரியும் டாக்டர் ஜோவினா நாயுடு, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவிற்கு மதிப்பும், மகிழ்வும் சேர்த்தனர்.

கண்மணியாகும் கடாரத்தின் மைந்தர், கடார மாநில இந்தியக் காங்கரஸ் கூட்டமைப்பின் தலைவரும், சமூகநலத்துறையில் தீவிரமாக செயல்படுபவருமான சுரேஷ் சுப்பிரமணியம், நில ஆய்வாளர் டாக்டர் மாறன், தமிழ் கலாச்சார ஆய்வாளர் மேகராஜா, பினாங்கு மாநிலத்தின் தலைசிறந்த சமூக நாயகர்களில் ஒருவரான டத்தோ மரியதாஸ் கோபால், அவரது துணைவியார் டத்தின் ஜேஜே, டாக்டர் நசீர் முகைதீன், கல்வி முன்னேற்ற வீரர் ஆசிரியர் குமரன் ஆகியோர் தங்களது வருகையால் நிகழ்ச்சிக்கு பெரும் சிறப்பூட்டினர்.

விழாவின் முக்கிய அம்சமாக, எம.ஜி.ஆர். நினைவாக நடத்திய கலை நிகழ்ச்சியில் பாடல், நடனம், நாடகம் என பல்வேறு வகைபாடுகளில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள், மக்களின் மனங்களை மகிழ்வித்தனர். அந்த மாபெரும் கலைவிழா, ஒரு பண்டிகைத் தோற்றம் கொண்டு, கலையும், பண்பாடும் கலந்த ஓர் ஆனந்த நிகழ்வாகும் போல் சிறப்புற்றது.
சமூகவியல் பார்வை, தமிழ்ச் செல்வாக்கு, மற்றும் சமூக நல விழிப்புணர்வை ஓரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில், டாக்டர் சின்னையாவின் பங்களிப்பு, ஊறும் கிணறுதான் இறைக்கின்றது எனும் வரிகளை உணர்த்தும் படியாக, நன்றி மாலை சூட்டப்பட்டு பாராட்டப்பட்டது.
இவ்விழா, தமிழ் மரபின் மீது கொண்ட பக்தி, கலை மீது கொண்ட பாசம் மற்றும் சமூகத்தின் மேம்பாட்டிற்காக இணைந்த வாழ்வியல் விழுமியங்களை வலியுறுத்தும் வகையில், ஒரு இனிய நினைவாக நிலைத்திருக்கும் என்றால் அது மிகையாகாது.
பினாங்கு
அகதிகளுக்கான உலகளாவிய பாதுகாப்புக் காவலரின் மலேசியப் பிரதிநிதி பினாங்கு மேயருடன் சந்திப்பு!
ஜொகூர் பாரு
ஜொகூர் மாநில உள்ளூர் அதிகாரம் மன்ற உறுப்பினர்கள் மாநாடு 2025–ஐ டத்தோ’ ஜஃப்னி திறந்து வைத்தார்.
பினாங்கு
தலைநகரின் ஷா அலாம் நகரசபை ஊழியர்கள் பினாங்கு மாநகர் மன்றத்திற்கு நல்லெண்ண வருகை!
சிலம்பம்
Penang Silambam Team Set to Compete at BMAEX Tournament 2025 in Labuan
கூலிம்
கான்கிரீட் கலவை லாரியுடன் மோதியதில் கூலிமில் 17 வயது மாணவர் உயிரிழப்பு
கால்பந்து
பிரிமியர் லீக்: அர்செனல் இரு கோல் வித்தியாசத்தில் எதிரியை வீழ்த்தியது
சபா
Sabah Mourns the Passing of Bung Moktar Radin