Alaioli
பினாங்கு மாநில ஆளுநர் டத்தோ ஶ்ரீ உத்தாமா ரம்லி  ஙா தாலிப் 84 வது பிறந்த நாள் இறுதி நாள் விருது விழா.

பினாங்கு மாநில ஆளுநர் டத்தோ ஶ்ரீ உத்தாமா ரம்லி ஙா தாலிப் அவர்களின்  84 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக சேவையாற்றிய இந்தியச்  சேவையாளர்கள் பலருக்கு  நேற்று  மூன்றாம் நாள் விருதளிப்பு விழாவில் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.


விருது பெற்றவர்களில் பினாங்கு இந்திய வர்த்தகர் தொழிலியல் சங்கத்தின் துணை தலைவரான DMPN எனும் உயரிய டத்தோ விருது பெற்றார்.


பினாங்கு மாநில பாரம்பரிய,கலாச்சார சமுக நல இயக்கத்தின் தலைவர் திருமதி சுமதி சுதாகர் பிஜேகே விருது பெற்றார்.பினாங்கு மாநில சிலம்பம் போர் கலை தலைவர் ஆர் கவிகுமார் பிஜேஎம் விருது பெற்றாதுடன்,சிம்பாங் அம்பாட் மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் மு.வ.கலைமணி பிகேடி  விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்



இவர்களுடன் பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் அவர்களின் அலுவலக அதிகாரி கே. அண்ணா அவர்களுக்கு டிஜேஎன் விருது பெற்றார்.உடன் இஸ்கோன் கிருஷ்ணர் ஆலயத்தின் சமூக நலப் பிரிவு தலைவர் பி.ஜெகதீசன் பிஜேகே விருதுப் பெற்றார், பினாங்கு ஜபிஎப் கட்சியின் மாநில செயலாளர்   தினகரன் ஏழுமலை அவர்கள் பிஜேகே விருது பெற்றார்,பினாங்கு மாநிலத்தில் நன்கு அறிமுகமான சமூக சேவையாளர் ரஞ்சிதமலர் அவர்களுக்கு பிஜேகே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.


Post ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News