சபா மாநிலத் தேர்தலில் ஒரு நாள் ம இ கா போட்டியிடும் காலம் வரும்.சபா சட்டமன்றத்தில் ஒரு இந்தியர் சட்டமன்ற உறுப்பினராக நுழைந்து வரலாற்றை படைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனவும் ம இ காவின் தேசிய உதவித்தலைவர் டத்தோ டி முருகையா கூறினார்.
தீபகற்பத்திலிருந்து பல கட்சிகள் சபா தேர்தலில் போட்டியிடும் நிலையில் வருங்காலத்தில் ம இ காவுன் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாக அவர் கோடிக்காட்டினார்.
சபா மாநில ம இ கா பேராளர் மாநாட்டில் உரையாற்றுகையில் டத்தோ டி.முருகையா இதனை நினைவுறுத்தினார்.
இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ம இ காவிற்கு சபாவில் 25 கிளைகள் இருப்பதாகவும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மாநிலத் தலைவரான பீர் முகமது காடீரை கேட்டு கொண்ட அவர் ம இ கா இந்தியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் சபாவில் சேவையாற்றும் எனவும் கூறினார்.
மேலும்,சபாவிலுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் ம இ காவில் இணையுமாறு கோரிக்கை விடுத்த அவர் இந்தியச் சமுதாயத்திற்கு கல்வி உட்பட சமூக பொருளாதார உதவிகளையுன் ம இ கா தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் தனதுரையில் கூறினார்.
பெர்லிஸ் தொடங்கி சபா வரை ம இ கா மாநில பேராளர் மாநாடுகள் நிறைவை எட்டிவிட்ட நிலையில் கட்சியின் தேசிய பொது பேராளர் மாநாடு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறலாம் எனவும் குறிப்பிட்டார்.