Alaioli
மலேசியர்களின் ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படுத்தாதீர் - சிவநேசன் கோரிக்கை!!

மலேசியர்களிடையே மேலோங்கியிருக்கும் ஒருமைப்பாடு மற்றும் மதநல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக்கூடாது.அவ்வாறு செயல்படுவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

ஈப்போவில் நடைபெற்ற நாட்டின் 68வது  சுதந்திர நாள் பேரணியின் போது  பேரா மாநில சுல்தான் நஸ்ரின் ஷாவை பிரதான மேடையில் அணுகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெண் தொடர்பில் இனரீதியிலான கருத்தினை முகநூலில் பதிவிட்ட மஞ்சோய் சட்டமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.


இச்சம்பவம் தொடர்பில் பேரா மாநிலத் தலைமை காவல்நிலையத்திற்கு வருகை புரிந்த சிவநேசன் மாநில காவல்துறை துணைத்தலைவர் டிசிபி முகமாட் அஸ்லின் பின் சடாரியிடம் இவ்விவகாரம் தொடர்பில் விளக்கம் பெற்றார்.


அதுகுறித்து மேலும் பேசிய சிவநேசன் அப்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு,இவ்விவகாரம் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு,முக்கிய நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு குறித்த விடயத்தில் ஐயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கருத்துரைத்தார்.மேலும்,இனி வருங்காலங்களில் இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என கேட்டு கொண்ட அவர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள் அவசியமென்றார்.

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு விதிக்கப்பட்ட  தடுப்புக்காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில்  தொடர் விசாரணைக்காக மேலும் மூன்று நாள் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவநேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 தொடர் விசாரணைக்கு பின்   விசாரணை அறிக்கை  துணை வழக்கறிஞர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் விசாரணை அறிக்கையின் படி 

அப்பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 அதேவேளையில்,இச்சம்பவத்தை இன ஒன்றுமையை சீர்குழைக்கும் தன்மையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவேற்றம் செய்த சம்மதப்பட்ட  சட்டமன்ற உறுப்பினர் மீது கடுமையான சட்டம் பாய வேண்டும் என பேரா மாநில காவல் துறைத்துணைத்தலைவரை சந்திந்த பின்னர் சிவநேசன் தன் கருத்தினை வெளிப்படுத்தினார்.

காவல்துறை மட்டுமின்றி சம்மதப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது தகவல் பல்லூடக அமைச்சும் சட்ட ரீதியிலான நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மலேசியா அனைத்து மக்களுக்குமான நாடு.இது பல்லினம் வாழும் தனித்துவமான நாடு.இங்கு இனவாதம் பேசுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இதுமாதிரி பொறுப்பில்லாமல் செயல்படும் அனைவருக்குமான பாடமாக அமைய வேண்டும் என நினைவுறுத்தினார்.


மலேசியாவின் மாண்பை போற்றும் ஒவ்வொருவரும் தங்களின் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது.ஒற்றுமையை சீரழித்திடவும் கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.

Leave a Comment
Trending News