Alaioli
ஐபிஎப் கட்சி வெறும் அரசியல் கட்சியல்ல, அது சமூக கட்டமைப்பு - டத்தோ லோகநாதன் சூளுரை.

ஐபிஎப் கட்சி வெறும் அரசியல் நடத்தும் கட்சியல்ல, அது மக்கள் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காணும் கட்சியாக ஒரு கட்டமைப்பாகவும் வலம் வருகிறது என்று ஐபிஎப் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் சூளுரைத்தார்.


கடந்த 35 ஆண்டுகளாக ஐ.பி.எப் கட்சி மக்கள் மத்தியில்  பயணித்து வருகிறது எனக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் கூறிய வேளை ஐபிஎப் தொண்டர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை காண முடிந்தது.


செபராங் ஜெயா கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில்   நடைபெற்ற “நாளை நமதே” என்ற கருப்பொருளில் அமைந்த கலை இரவின் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியை, ஐ.பி.எப். பத்து கவான் தொகுதி தலைவர் ந. மகேந்திரன் மற்றும் கப்பளா பத்தாஸ் தொகுதி தலைவர் ஏ. தினகரன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சமூகப் பொறுப்புணர்வை நிறைவேற்றும் வகையில் பிறை ஷான் ஹோம் கருணை இல்லத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.


காவல்துறையின் விசாரணை


ஐ.பி.எப். கட்சியைப் பற்றிய ஒரு நாளிதழ் தலையங்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த டத்தோ லோகநாதன்,

இந்த விவகாரம் குறித்து காவல்துறையின் பார்வைக்கு விட்டு விடுகிறேன் என்றார். எனவே அனைவரும் அமைதியாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்என்றார்.


மாநிலத் தலைவர்களின் ஒற்றுமை


பினாங்கு மாநில ஐ.பி.எப். கட்சியின் இரு தொகுதிகளின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மாநிலத் தலைவர் ச. குமரேசன் தனது சிறப்புரையில்,

“டத்தோ லோகநாதன் தலைமையில் எட்டு மாநிலத் தலைவர்கள், 38 மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து, மக்கள் நலனுக்காக ஒன்றுபட்டு நிற்கிறோம். ஐ.பி.எப். வெறும் சாதாரன கட்சியல்ல, அது மக்கள் நலனை  மையமாக கொண்டு இயங்கும் மணிமகுடம் எனக் குறிப்பிட்டார்.


மாபெரும் வெற்றி


ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ந. மகேந்திரன் தனது வரவேற்பு உரையில்,

நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான பொதுமக்கள் கூடியது, இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியின் சான்றாகும் எனக் கூறினார்.


தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அம்னோ கப்பளா பத்தாஸ் தொகுதி செயலாளர் டத்தோ அஹ்மாட் டருஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர், அம்னோ கப்பளா பத்தாஸ் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ரிசால் மரிக்கானின் பிரதிநிதியாக வந்திருந்தார் உரை நிகழ்த்தினார். பாரம்பரியமும் நவீனமும் இணைந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. வருகை அளித்த மாற்று கட்சி உறுப்பினர்களான மஇகா டத்தோ ஜெ.தினகரன், கெராக்கான் கட்சி சிவசுந்தரம், பிகேஅர்  கட்சி பிரதி நிதி உட்பட பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன், வர்த்தக சங்க உதவித் தலைவர் டத்தோ மரியதாஸ் கோபால், மை பிபிபி தலைவர் மு.வேலாயுதம் மேலும் பலருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Leave a Comment
Trending News