இஸ்லாமியக் கட்சி பாஸ் (PAS) தனது 75ஆவது ஆண்டு விழாவை அடுத்த ஆண்டு பினாங்கில் நடத்த இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் தகியுதீன் ஹாசான் அறிவித்துள்ளார்.
1951ஆம் ஆண்டு பினாங்கில்தான் பாஸ் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும், “பினாங்கையும், டிஏபியையும் (DAP) நாங்கள் அதிரவைப்போம்” என அவர் தெரிவித்தபோது, பாஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் (71ஆவது பொதுக்கூட்டம்) கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஆரவாரம் செய்தனர்.
அவர் மேலும், அடுத்த பாஸ் முக்கத்தாரம் அக் ளந்தானில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வழங்கிய கொள்கை உரையை விவாதிக்க பிரதிநிதிகளுக்கு குறைந்த நேரமே வழங்கப்பட்டிருப்பதாகவும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் மாநில மற்றும் தொகுகளில் கூட்டத்தில் அதைப் பற்றி தொடர்ந்து பேசலாம் எனவும் தகியுதீன் விளக்கம் அளித்தார்.
அதே நேரத்தில், கட்சியின் குறைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என எச்சரித்தார்.
“பொதுக்கூட்டதில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பேஸ்புக்கில் சென்று குறை கூற வேண்டாம். அதிலிருந்து பயன் பெறுவது எங்கள் எதிரிகள் தான். எங்களின் உண்மையான போராட்டம் வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தல்தான் (GE16), எங்களுக்குள் அல்ல,” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் கட்சி உறுப்பினர்களுக்கு அவசியம் எனவும், பாஸ் எந்த மதத்தைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத குடிமக்களையும் தற்போது துணை உறுப்பினர்களாக வரவேற்கிறது எனவும் தகியுதீன் தெரிவித்தார்.