பகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்,பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன்,பாகான் ஜெர்மால் மாநில சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன்,செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர்கள் லிங்கேஸ்வரன் ,பொண்ணுதுரைஆகியோர், நேற்று உஜோங் பத்து ஐயா கோவிலில் நடைபெற்ற 12ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் வந்திருந்தோர் கோவில் நிர்வாகத்தினரும், அப்பகுதி மக்கள் பலரும் அன்போடு வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சி, மக்களுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை கொண்டாடும் அரிய தளமாகவும் அமைந்தது.
விழாவில் கலந்து கொண்டவர்களுடன் சேர்ந்து உணவு உண்ட அனுபவம், அப்பகுதியின் பல இன மக்களிடையேயான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை பிரதிபலித்தது.
கோவில் நிர்வாகத்தினரின் சிறப்பு அழைப்புக்கும், சமூகத்தின் மரபுகளைத் தக்கவைத்துக் காக்கும் முயற்சிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.